தமிழ்நாடக வரலாறு 29 5
மாநகரங்கள், நகரங்கள், நடுத்தர நகரங்கள் முதல் சிற்றுார்கள்வரை பெரிதும் சிறிதுமாக நூற்றுக்கணக்கான கலையரங்கங்கள் நாடகத்திற்கென்றே அமைக்கவேண்டும். இவைகள் திறந்தவெளி அரங்கங்களாகச் சிக்கனமுறையில் ஆங்காங்குள்ள நகராட்சி ஊராட்சி ஒன்றியங்களே பொறுப் பேற்றுச் செய்துவிட முடியும். இதே சமயத்தில், குறைந்தது ஒரு பத்து நிரந்தர நாடகக் குழுக்களாவது தமிழகத்திலே தோன்றுவதற்கான முயற்சியைத் தமிழக அரசு உடனடி யாகத் தொடங்கியாகவேண்டும். இதற்கு அறிஞர் அண்ணா அவர்கள் அருமையான பல திட்டங்களைத் தீட்டியிருந்தார். நாடகக் கலையின் இன்றைய நிலை
நாடகக் கலையின் முற்காலம், பொற்காலம், தற்காலம் என்று மூன்று நாட்களுக்கும் மூன்று தலைப்பைத் தந்து எனது உரையை தொடங்கினேன். இன்று மூன்றாம் நாள் உரையில் முடிவுக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறேன்.ஆயினும், நாடகக் கலையின் தற்காலம் என்ற தலைப்பைத் தொடுவதற்கு இன்னும தயக்கமும் தடுமாற்றமும் ஏற்படுகின்றது. காரணம் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் நம் எல்லோருக்குமே தெரிந்ததுதான். ஆம், இன்றைய தமிழ் நாடகக் கலையின் சூன்ய நிலை என்னை அத்தகைய தயக்கத்திற்கு உள்ளாக்குகின்றது.
இந்த நூற்றாண்டின் ஆரம்ப காலம் தொடங்கி, அரை நூற்றாண்டு காலம்வரை, ஒன்றன்பின், ஒன்றாய்ப் போட்டி போட்டுக் கொண்டு தோன்றிய நூற்றுக்கணக்கான நாடகக் குழுக்கள், அவைகள் சாதித்த சாதனைகள், நடத்திய ஒப்பு யர்வற்ற நாடகங்கள், அவற்றை எழுதியும் பயிற்சி தந்தும் உயர்த்திய ஆசிரியர்கள், அதன்மூலம் மக்களின் பேராதரவு பெற்று விளங்கிய எண்ணற்ற நடிக நட்சத்திரங்களின் ஆற்றல், அபரிமிதமான இசைத்திறம், இவை அனைத்தும் பொய்யாய்க் கணவாய்ப் பழங்கதையாய்ப் போனதை எண்ணுந்தோறும் இதயம் வேதனையால் விம்முகிறது. நாடகக் கலையின் சென்ற கால வரலாறு தெரிந்த-அனுபவத்