பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 கவிஞர் கு. சா. கி.

தால் உணர்ந்த பெரியோர்கள் யாரைக் கேட்டாலும் இந்த வேதனையைத்தான் வெளிப்படுத்துவார்கள்.

ஒரு நாட்டின் பெருமையை, அந்த நாட்டின் கலை, நாகரிகம், பண்பாடு, பாரம்பரியம் இவற்றைக் கொண்டுதான் மற்ற நாட்டினர் மதிப்பிடுவார்கள் என்ற உண்மை, எல்லா நாட்டினருக்கும், எல்லா காலத்திற்கும் உரிய இலக்கண் மாகும். -

அந்த அளவு கோலை வைத்து, இன்றைய தமிழ்நாடகக் கலையின் நிலையைப்iபார்க்கும்போது, மற்ற இனத்தினர், மற்ற மொழியினர், மற்ற நாட்டினரின் முன்னே தலை குனிய வேண்டிய தாழ்ந்தநிலைக்கு நாம் வந்துகொண்டிருக்கிறோம் என்ற உண்மையை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். என் றென்றும் நமது நிலை இதுவாகவே இருந்திருந்தால் இன்று இதற்காகக் கவலைப்படாமல் கூட இருக்கலாம். ஆனால் மொழியையே முத்தமிழாகப் பகுத்து, அதில் நாடகத்

. È -

தமிழுக்கென்றே தனியாக இலக்கிணம் வகுத்து. அகத்தியம், பரதம், தொல்காப்பியம் என்று வழிவழியாக எண்ணற்ற நாடக இலக்கண நூல்களைப் படைத்துப் பெருமை பேசிக் கொண்டிருக்கும் தமிழ்க்குலம், இந்த அவல நிலைக்கு வரலாமா? நாளைய வரலாறு நம்மைக் கண்டு நகைக்காதா? என்பதுதான் என் கவலை.

சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் அவர்களும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்களும், அறிஞர் பெருமக் களும் ஆராய்ச்சி மாணவர்களும் குழுமியுள்ள இம்மாமன்றத் தில் இந்த எனது எளிய வேண்டுகோளைச் சமர்ப்பிக்கும் வாய்ப்பளித்தமைக்காகத் துணைவேந்தர் அவர்களுக்கும், பதிவாளர் அவர்களுக்கும், தமிழ்த்துறைத் தலைவர் அவர்களுக்கும், மீண்டும் ஒருமுறை எனது பணி வார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் கூறி அமைகின்றேன்.

நன்றி வணக்கம்