பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகம் போற்றும் உத்தமர் மகாத்மா காந்தியடிகள் 10-2 -43-லிருந்து மூன்று வாரம் தொடங்கிய உண்ணா விரத நோன்பு வெற்றி அடைந்து உலக நலத்தின் பொருட்டு அவர் மேலும் நெடு நாள் நலமோடு உயிர் வாழ வேண்டுமாய் உலக மக்கள் எல்லாம் ஆங்காங்கு பிரார்த்தனையும் உண்ணா நோன்பும் இருந்த போது புதுக்கோட்டை பொதுமக்களால் 27-2-43 சனிக்கிழமை மாலை தேவி அரிய நாச்சி அம்பிகை ஆலயத்தில் நடத்திய பிரார்த்தனைக் கூம்டத்தில் கவிஞர் கு. சா. கிருஷ்ண மூர்த்தி அவர்கள் இயற்றி வழங்கிய

பிரார்த்தனைப் பாமாலை

தியாகம்ே உருவாய் வந்த ஜீவகாருண்ய மூர்த்தி மோகன தாசரென்ற முதிர்ந்த மெய்ஞானி, உண்ணா யோகம் மேற்கொண்டார் அன்னார் உயிரொன்றே எமது-செல்வம் ஆகையால் அகிலத்தோர்க்கு இவ்வமையம் நீ அருள்வாயம்மா!

ஈரிருபத்துக் கோடி இந்தியர் அடிமை யென்னும் காரிருள் காய வந்த காந்திஜீ' உயிருண்டானால் சீரிய உலகுண்டாகும் சினம், பகை, வறுமை நீங்கும் பேரருள் படைத்த-எங்தை பிழைத்திட அருள் வாயம்மா!