பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தமிழ் நாவலர் சரிதை வெண்பா பொதியிலகத்தியணுய்ப் பொய்யா மொழியாய் அதிக வமண்பாக் கிழாய்ைத்-துதிபெருகு செங்காட்டுக் கோட்டங் துறையூ ரெனுந்தலத்துச் சங்காத்தங் கொண்டிருப்பாய் தான். 66. இஃது இவர் ஆசிரியர் பாடியது. குதிப்பு : பொய்யாமொழியார் வயிரபுசத்திவிருந்து தமிழ் கற்றுக் கவிபாடும் பாவன்மையும் புலமையும் சிறந்து தம்முடைய ஆசிரியரை வணங்கி விடைபெற்றபோது ஆசிரியர் இப்பாட்டால் பொய்யாமொழியாரை வாழ்த்தின ரென்பர். பொய்யாமொழி யென்பது திருவள்ளுவனுர்க் குரிய சிறப்புப் பெயர்களுள் ஒன்று. இலக்கணப் புலமையில் அகத்தியன் ப்ோலவும், இலக்கியப் புல மை.யில் திருவள்ளுவர் போலவும், செல்வவாழ்வில் கிழானுகவும் விளக்க வேண்டு மென்பது ஆசிரியர் கருத்து. பொய்யாமொழி யென்ற சிறப்புப் பெயர் பயில வழங்கவே, இயற்பெயர் மறைந்து போயிற்று. இதன் இரண்டாமடி ய தி க வம ண் ப க் கிழாஅய்' என்றிருப்பது கொண்டு பலரும் யதிகை யமாப்பர்க் - கானாப் ’’ என்றும், ! ய்திக வமணப்பர்க் கீழாய் ' என்றும், "யதிகை யமண் பாக்கக் கீழாய் ' என்றும் பாட மோதுவாரா யினர். அதிக வமண்பாக் கிழானுய் என்பது கிருந்திய பாடமாகத் தோன்றுகிறது. செங்காட்டுக் கோட்டத்தில் சிறப்புற்ற ஊர்களுள் அதிகத்துர் என்பது ஒன்று: அஃது அதிக மெனக் குறைந்து கின்றது. அமண்பாக்கக் கிழானென்பது அமண்பாக்கிழா னென. வந்தது; கொள்ளம்பாக்கக் கிழான் கொள்ளம்பாக்கிழான் (S. I-Ins- Vol. V. No. 464) என்றும், பெரும்பாக்கக்கிழான் பெரும்பாக்கிழான் (S. . . V. No. 487) என்றும் வழங்கினும் போல. அமண்பாக்கம், சயங்கொண்ட சோழ மண்டலத்துச் செங்காட்டுக் கோட்டத்து மாகனுசர் காட்டு ராச சூளாமணிச் சதுர்வேதி மங்கலத்தின் தென் பிடாகை அமண்பாக்கம்’ எனப் பரகேசரிவன்மன் விசைய இராசேந்திர சோழனது நான்கா