பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. மூன்று நாவல்கள்

87

கூறும் ஆற்றலும் நிரம்பியவன். தன் கணவனுக்கு எந்தக் கேடு நேர்ந்தாலும் தனக்கு அவன் அடங்கியிருக்க வேண்டும் என்று நினைத்து வசிய மருந்திட்டுக் கொன்ற பழிகாரி.


ரகரம் வாயில் நுழையாத சுப்பு வம்பர் மகாசபையின் தலைவியாக இருந்து கூனிபோலக் கோள் சொல்லிக் கலக மூட்டிவிடும் குண்டுணி.


இப்படிப் பெரிய பாத்திரங்களையும் சிறிய பாத்திரங்களையும் அமைத்துக் கதையைப் பின்னியிருக்கிறார் ஆசிரியர்.


மனத்தத்துவ உண்மைக்கு இயையப் பாத்திரங்கள் எண்ணிப் பேசி நடப்பதைக் காட்டுகிறார். அழகிய வருணனைகளை அமைக்கிறார். ஆசிரியரே கதை சொல்வதாக அமையும் நாவலில் இடையிடையே உரையாடல்கள் இருந்தால் தான் கதைக்குச் சுவை உண்டாகும் என்று திறனாய்வாளர் கூறுவர், ராஜம் ஐயர் பலபல உரையாடல்களைக் கொண்டு பாத்திரங்களின் இயல்பைக் காட்டியிருக்கிறார்.


முன் அறிகுறி

பின்வரும் தீங்கைக் குறிக்கும் வகையில் சில செயல்கள், முன்னே அமைவதாகச் செய்வது நல்ல நாவல்களில் வரும் உத்தி. லக்ஷ்மியின் கல்யாண நிச்சயதார்த்தம் ஆகும்போது வம்பர் மகாசபைப் பேச்சில் சுப்பு, "அட இழவே, தன்னால் அகத்துக்குப் போனால் தெரிகிறது" என்கிறாள். கல்யாண முகூர்த்தம் ஆனபிறகு ஆசீர்வாதம் கடக்க வேண்டிய தருணத்தில் வம்பர் மகாசபையின், உத்தியோகஸ்தர்களில் ஒருத்தியாகிய குப்பிப் பாட்டி,


1. Miriam Allot; Novelists on the Nover, p. 208. - 2, ப. 19.