பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

தமிழ் காவல்

நாவலில் அலுப்புத் தட்டிவிடும். நேரில் ஒருமணி பேசும் பேச்சுப் போன்றது, நாவலில் அஞ்சு நிமிஷம் பேசும் பேச்சு. ஆதலின் சிறிய உரையாடல்களாக வைத்து இடையே சாதுர்யமும் சுவையும் அமையும்படி எழுத வேண்டும். அதே சமயத்தில் பாத்திரங்களின் பண்புகளும் தோன்றும்படி அந்த உரையாடல் இருக்கவேண்டும். கடியார முகப்பு நாவலாசிரியர்களென்றும், அகத்தது காட்டும் காவாலாசிரியர்களென்றும் இரண்டு வகையாகப் பிரிப்பது ஒரு முறை (Dial-plate novelists and Inner working novelists). முதல் வகையினர் வெளித் தோற்றங்களையும், ஆடையணிகளேயும், சூழ்நிலைகளையும் மிகுதியாக வருணிப்பவர்கள். மற்றவர்கள் மனித மனத்தின் அலைகளை, புயல்களை, இன்பச் சுழிப்புகளை வேதனைகளை மிகுதியாக வெளியிடுபவர்கள். இந்த இருவகையினரும் உரையாடலை நன்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.[1]

கல்கி அலையோசையில் உரையாடல்களை மிகுதியாகப் பயன்படுத்தியிருக்கிறார், சூரியாவின் சுதந்தர உணர்வும், உழைப்பவர்க்கு உழைப்பதன் பயன் வேண்டுமென்ற பரிவும், முதலாளிகளின் மேல் வரும் கோபமும் அவன் பேச்சில் வெளியாகின்றன. ராகவனின் மனக் குழப்பமும், அகம்பாவமும், அலட்சியமும், வெறுப்பும் அவன் பேச்சில் ஒலிக்கின்றன. ஒரே சமயத்தில் தாரிணியுடன் பேசும் போது குளிர்ந்து வருகிற அவன் வார்த்தைகள். சீதாவுடன் பேசும்போது சீறலாக வருகின்றன. இரண்டு பேரிடத்திலும் அவனுக்கு உள்ள மன நிலையை அந்தப் பேச்சுக்கள் காட்டுகின்றன. முதல் முதலில் நாம் காணும் சீதாவின் பேச்சில் கலகலப்பும் அஞ்சாமையும் அறிவும் புலனாகின்றன. ஆனால் அவள் மனத்தில் பொறாமை யென்னும் நஞ்சுத் துளி புகுந்தவுடன் அந்தப் பேச்சில்


  1. 1. Novelists on the Novel, p. 208