பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

தமிழ் நாவல்


கவிதையிலும் கதை இருந்தது. பெரிய காவியங்கள் யாவும் கவிதை உருவில் அமைந்த பெரிய கதைகளே. ஆனால் அந்தக் கதைகள் பன்னெடுங் காலமாக வழங்கி வந்த கதைகள், அவற்றைக் கவிதை உருவத்தில் கவிஞர்கள் அமைத்தார்கள்.

இந்திய நாட்டின் பழங்கதைகளாகிய இராமாயணமும் பாரதமும் எல்லா இந்திய மொழிகளிலும் கவிதையுருவில் காவியங்களாக பிற்கின்றன. அவை எத்தனையோ காவியங்களுக்குரிய கருவைத் தந்திருக்கின்றன; இனியும் தரும்.

கதை கேட்கும் ஆவல்

தை கேட்கும் ஆவல் மனிதனுக்கு இருப்பதைச் சொன்னேன். அந்த ஆவல் அவனுக்கு எவ்வாறு இருக்கிறது? அடுத்தபடி என்ன?' என்று தெரிந்து கொள்ளும் ஆவல் அது. கதை போகப் போக இந்த ஆவலைத் தூண்டி விடுகிறது. அது நீள நீள ஆவலும் அதிகமாகிறது. எப்படி முடியப் போகிறது என்ற எண்ணம் மற்றவற்றை யெல்லாம் மறக்கச் செய்து கேட்டவனுடைய உள்ளத்தை அந்தக் கதையில் ஆழ்த்தி விடுகிறது. இந்த இயல்பு மனிதன். அறிவிலும் கலையிலும் முதிராத காலத்திலேயே உண்டாகி விட்டது. இந்த இயல்பை ஒருவாறு குழந்தைகளிடம் காணலாம். கதையைக் கேட்பதில் அவர்களுக்குள்ள ஆர்வம் அதிகம்.

பழங்காலத்தில் வாழ்ந்த காட்டுமிராண்டி மக்கள் விலங்குகளுடன் போரிட்டுவிட்டு இராக் காலங்களில் தீ எழுப்பி, அதைச் சுற்றி உட்கார்ந்து. குளிர் காய்வார்களாம். அப்போது சிலர் பொழுது போக்குவதற்குக் கதைசொல்ல 'வேண்டுமாம். கதை நீண்டு கொண்டே