பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

தமிழ் நாவல்

என்றால் நம்புபவர்கள் நம்பலாம்; நம்பாதவர்கள் விட்டு விடலாம். ஆனால் உண்மையாக வாழ்ந்த மக்களிடம் இத்தகைய அற்புதக் கதைகளை ஏற்றிச் சொன்னால், உண்மைகூடப் பொய்யோ என்ற ஐயம் உண்டாவது இயல்பு. இன்று நம்மிடையே மன்னர்களைப் பற்றியும் புலவர்களைப் பற்றியும் வழங்கும் பல கதைகளில் இத்தகைய மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட அமானுஷ்யச் செயல்கள் வருகின்றன. எது உண்மை, எது கற்பனை என்று தெரியாதவண்ணம் அவை பிணைந்து கிடக்கின்றன.

இவை, உண்மையை விடக் கற்பனைக் கதைகளைத் தமிழர்கள் எவ்வளவு ஆவலாகக் காது கொடுத்துக் கேட்டார்கள் என்பதைக் காட்டுகின்றன. பேரரசர்களின் குலம் மறைந்து. அங்கங்கே சிற்றரசர்களும் ஜமீன்தார்களும் பாளையப்பட்டுக்களும் தோன்றிய காலத்தில் அவர்களைப் பற்றிய கதைகள் எழுந்தன. அவை பெரும்பாலும் கட்டுக் கதைகளாகவே இருந்தன; உண்மை வரலாற்றில் சில துளிகள் எங்கேனும் ஒளிந்து கொண்டிருக்கும்.


ஆங்கிலேயர்களின் தொடர்பு

தினேழாவது, தாற்றாண்டு வரையில் இத்தகைய கதைகளே தமிழ் நாட்டில் கதை கேட்போருடைய பசிக்கு உணவாக இருந்து வந்தன. பதினெட்டாவது. நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் தொடர்பு உண்டாயிற்று. வணிகர்களாக வந்த போல் நாட்டினர் நாள்டைவில் சொத்தாசையினால் நாடு பிடித்தார்கள்; அரசாட்சி செய்யத் தொடங்கினார்கள். அவர்களுடைய அரசியலாதிக்கத்தின் பலத்தால் சமயப் பிரசாரகர்களாகிய பாதிரிமார்கள் இங்கே வந்து தங்கள் சமயத்தைப் பற்றிப் பிரசாரம் செய்யத் தொடங்கினார்கள். ஆங்கில மொழி இங்கே புகுந்து பரவி வேரூன்றியது.