பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

தமிழ் நாவல்

நாவல்கள், தமிழிலேயே தோன்றிய மூல நாவல்கள், தொடர் கதைகள் என்று அவற்றை வகைப்படுத்தலாம். சுதந்தரப் பொராட்டத்துக்கு முந்தியவை, அதற்குப் பந்தியவை என்றுகூட ஒரு வகையில் இவற்றைப் பிரித்துப் பார்க்கலாம்.

ஆங்கிலம் தமிழ்நாட்டில் பரவப் பரவ ஆங்கிலத்தில் உள்ள இலக்கிய மதிப்புடைய நாவல்களை அறிஞர்கள் படித்து இன்புற்றார்கள். பொழுது போக்குவதற்காகவே அமைந்த நாவல்கள் பல இங்கிலீஷில் புற்றீசல்கள் போலத் தோன்றின. அவை இங்கே ஏராளமாக இறக்குமதியாயின். மர்மக் கதைகள், அரச குடும்பத்தின் காதல் விளையாடல்களும் திருடர்களின் தந்திரச் செயல்களும் துப்பறியும் சாமர்த்தியங்களும் அடங்கிய கதைகள் போன்றவை படிப்பவர்களின் உள்ளத்தில் கதை முடிகிற வரைக்கும் வேகத்தையும் பரபரப்பையும் தூண்டிவிட்டு வெறியையும் கிளர்ச்சியையும் எழுப்பின. படித்து முடிக்கிறவரையில் தான் அந்த வேகம் இருக்கும். முடிந்து மர்மம் வெளியான பிறகு மறுபடி அதைப் படிக்கவே தோன்றாது. இத்தகைய பர.பரப்பை ஊட்டும் நாவல்கள் இந்த நாட்டு இளைஞர்களின் உள்ளத்தைக் கவ்வின. பெரியவர்களும் வாசித்தார்கள். ரைனால்ட்ஸ் எழுதிய நாவல்களின் பதிப்புகள் கொட்டை எழுத்தில் இந்தியாவிலேயே ஆங்கிலத்தில் அச்சிட்டு வெளி யாயின.

ஆங்கிலம் அறியாதவர்கள் இந்தப் பரபரப்பு உணர்ச்சியைத் தெரிந்துகொள்ளாமல் போகிறார்களே என்ற எண்ணத்தினாலோ, இவற்றைத் தமிழ்ப் படுத்தினால் புகழும் செல்வமும் மிகுதியாகும் என்ற எண்ணத்தினாலோ சிலர் இத்தகைய நாவல்களைத் தமிழில் இறக்குமதி செய்யத் தலைப்பட்டார்கள். இந்தத் துறையில் முன்னணியில் நின்றவர் ஆரணி குப்புசாமி முதலியா