பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

தமிழ் நாவல்

அடுத்த காட்சியை ஆவலோடு நோக்கும்படி அமைய வேண்டும் என்று சொல்கிறார்களே! அது தவறா? என்று கேட்கிறார்.[1]

தொடர்கதைகளில் ஒவ்வோர் இதழிலும் ஏதாவது சுவையான கட்டம் அமைய வேண்டுமென்ற எண்ணத்தால் நூலின் முழுமையோடு இழையாத சம்பவங்களைக் கொண்டு வந்து புகுத்தும் இயல்பு சிலருக்கு உண்டு. ஒவ்வோர் அத்தியாய முடிவும் ஆவலைத் தூண்டும் வகையில் இருக்க வேண்டும் என்று சிலர் முயல்வதில் மொத்தத்தில் நாவலுக்கு இருக்க வேண்டிய கட்டமைதி அல்லது பிகு தளர்ந்து விடுவதுண்டு.

அன்றியும் தொடர்கதை எழுதும்போது கதையின், மூலக் கருவும் ஏற்புச் சட்டகம் போன்ற நிகழ்ச்சிகளும் இன்னவை என்று முதலில் திட்டமிட்டுக் குறித்துக் கொண்டே எழுதுகிறார்கள் ஆனால் சிறிய சம்பவங்கள், உரையாடல்கள், வருணனைகள் ஆகியவற்றை அவ்வப்போது கற்பனை செய்து எழுதுகிறார்கள். ஒவ்வொரு முறையும் எழுதும் போதும் உள்ள மனத்தின் நிலை ஒரே சீராக இருப்பதில்லை. தளர்ச்சியும் கிளர்ச்சியும் கலந்து நிலவும். இந்த வாரம் எழுதியே தீரவேண்டும் என்ற கட்டுப்பாடு இருப்பதனால் எப்படியோ எழுதி முடித்து விடுகிறார்கள். ஆனால் மூளை சரியாக வேலை செய்யா விட்டால் அந்த வாரக் கதை வெறும் வருணனையாகவோ, மனச்சுழற்சியின் சித்திரமாகவோ, பழஞ் சரித்திர விளக்கமாகவோ அமைந்து விடுகிறது. மொத்தமாகப் பார்க்கும் போது அந்தப் பகுதி இல்லாமல் இருந்தாலும் நாவலுக்கு ஒரு குறையும் வந்து விடாது.

மற்றொன்று: பொதுவாக மக்களுக்கு அந்த அந்தக் காலத்தில் நிகழும் நிகழ்ச்சியைப்பற்றித் தெரிந்து கொள்


  1. Arnold Kettle: As Introduction to the English Novel, p. 129.