பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

தமிழ் நாவல்



சிறுகுளத்தில் முத்துசாமி ஐயர் குறிப்பிட்டபடி வாராமையால் கமலாம்பாள் ஏங்குகிறாள். சித்த நிலை மாறியிருந்த பொன்னம்மாளுடைய வாய்மொழியால் தீட்சிதரும் பிறரும் செய்த கலகம் சப் மாஜிஸ்திரேட் வைத்திய நாதையருக்குத் தெரிய வருகிறது. முத்துசாமி ஐயரைக் காணவில்லை என்ற செய்தி தந்தி மூலம் சென்னைக்குத் தெரிய, ஸ்ரீநிவாசன், லக்ஷ்மி முதலியோர் ரெயிலேறி முத்துசாமி ஐயரைத் தேடிக் கொண்டு சிதம்பரம் பயணப்படுகிறார்கள். இடையில் சீகாழியில் இறங்கிய ஸ்ரீநிவாசனை ஏமாற்றி அழைத்துச் சென்று, குதிரைக்காரர் இருவர் புதுச்சேரிக்குக் கொண்டு போய்ச் சிறையில் அடைக்கிறார்கள்.

அவனைக் காணாமல் வருந்தி மற்றவர்கள் ரெயிலில் போகிறபோது விபத்து நேர்கிறது. அருகில் கிராமத்தில் இருந்த அம்மையப்ப பிள்ளை கமலாம்பாளையும் லக்ஷ்மியையும் காப்பாற்றுகிறார். அவரும் அவர் மனைவியும் மற்றவர்களை அழைத்துக் கொண்டு சிதம்பரம் சென்று அங்கே முத்துசாமி ஐயரைத் தேடிக் காணாமல், காசிக்குப் போயிருப்பதாக அறிந்து, அங்கிருந்து புறப்படுகிறார்கள். முத்துசாமி ஐயரும் சுவாமிகளும் சிதம்பர தரிசனம் செய்துகொண்டு. திருவொற்றியூர் போய்ப் பிறகு காசியை அடைகிறார்கள். முத்துசாமி ஐயருடைய ஆன்மிக நிலை உயர்கிறது. எப்போதும் ஆனந்தமான ஒரு பக்குவத்தை அவர் அடைகிறார். தேடிவந்த அம்மையப்ப பிள்ளை, கமலாம்பாள் முதலியோர் சென்னை சென்று திருவொற்றியூரில் அவரைத் தேடியும் காணாமல் காசியை அடைகின்றனர்.

புதுச்சேரி ராஜ்யத்தில் முதல் மந்திரியாக இருந்தவர் அரசாங்க நிதியைத் திருடித் தம் மகனுக்கு அனுப்பியனால், அவரைச் சிறை செய்து, அவர் மகனைத் தேடிக்