பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணனின்

குறிஞ்சித் தேன்

“ທສຫມໍ

திருமதி ராஜம் கிருஷ்ணன் அவர்கள் எழுதிக் கலைமகள் காரியாலயம் வெளியிட்ட குறிஞ்சித் தேன்' என்ற நாவலைப் பற்றிய என்னுடைய சில கருத்துக்களை உங்கள்முன் எடுத்து வைக்க முன்வந்துள்ளேன். o

எந்த இலக்கியப் படைப்புக்கும் ஒரு தூண்டுதல் அவசிய மாகிறது. இந்தத் துரண்டுதலில் சூடு ஆறுவதற்குமுன் சுவையான இலக்கியம் சமைக்கும் ஆற்றல் எல்லோருக்குமே இருப்பதில்லை. இந்த நாவலின் ஆசிரியர் பெண்மணி யல்லவா? கிடைத்த வாய்ப்பை நன்ருகவே பயன்படுத்திக் கொண்டுள்ளார்' என்று இந்தப் படைப்பை ருசித்தனுப வித்தவர்கள் நிச்சயமாகச் சொல்லுவார்கள். - .

நீலகிரியில் பெரும்பான்மையாக வாழும் படக மக்களில், முதிய தலைமுறையினரின் மனப் போராட்டங்களை யும், சங்கடங்களையும், அவர்களுக்கும் பழமையின் சுவடே தெரியாமல் முன்னேறும் புதிய தலைமுறைக்கும் இடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள் பற்றியும் தாம் சித்திரிக்க எண்ணி யதன் விளைவே இந்த நாவல் என்கிருர், நீலகிரிப் பகுதியில்