பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97

அவர் மனம் எப்படிக் குமுறுகிறது என்பதை அவர் எழு த் து க் க .ே ள படம் பிடித்துக் காட்டுகின்றன. 'பெர்னட்ஷா தமிழ் நாட்டில் பிறந்திருந்தால் ஒன்று பட்டினியால் செத்திருப்பார்; அல்லது குமாஸ்தாவாக மாறிப் பழைய பைல் களுக்குத் தமது மூளையைக் குத்தகைக்கு விட்டிருப்பார். அரசியலுக்கும் இலக்கியத் துக்கும் வேற்றுமை தெரியாத இளைஞர்களையும் பழைய தமிழுக்குப் பின் தமிழ் செத்துவிட்டதென்று பெரு மூச்சு விடும் முதியவர்களேயும் கொண்ட நாடு இது, இலக்கியத் தைப் படிக்கும் முறை எது? படித்துப் பயனடைவது எப்படி? என்று ஒரு தமிழ் நூலைக்கூடக் கல்லூரியில் பாடமாக வைக்காதவர்கள் தமிழ் வளர்க்கிருர்களாம், தமிழ்!'

இந்த நாவலுக்குள்ள மற்ருெரு சிறப்பு; இது தொடர் கதையாக வந்ததுதான். நாவலை மதிப்பவர்களும் தொடர் கதை இலக்கியத்தை மாற்ருந்தாய் குழந்தையாகக் கருதும் நாடு இது. டால்ஸ்டாயின் அன்னகரீனவையும், டிக்கன்ஸ் நாவல்களையும் இவர்கள் ஏனே மறந்துவிடுகிருர்கள். காலம் தந்த இலக்கிய வடிவை ஏற்பதுதான் சிறப்பு என்கிருர் அறிஞர் டி. எஸ். எலியட். காலம் தந்த மிகச் சிறந்த பரிசான பத்திரிகைகளையும், அவற்றில் வரும் தொடர் கதை களையும்:மட்டும் புறக்கணிப்பது முறையாகுமா?

இறுதியாக ஒன்று. ஆக்ராவில் தாஜ்மகாலுக்கு அருகில் பேராசிரியர் சந்திரசேகரன், காதலுக்காக எழுப்பப்பட்ட தாஜ்மகால் என்ற கல்லோவியத்தையும், பாரதியும் பாரதி தாசனும் காதலுக்காகப் பாடிய கவிதை ஒவியத்தையும் சுட்டிக்காட்டிய போது உமா தணிகாசலத்திடம் ஓர் அன்பு வேண்டுகோள் விடுக்கிருள். நீங்கள் கட்டாயம் இதைபோல் ஒரு உர்ை நடை மாளிகை எழுப்பவேண்டும் என்று. உமாவின் ஆசை, தணிகாசலத்தைப்படைத்த திரு. அகிலன் மூலம் நிறைவேறுகிறது. ஆம்; காதலுக்குத் திரு. அகிலன் கட்டிய உரை நடை மாளிகைதான் பாவை விளக்கு."