பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 (ና

தணிகாசலத்தைப் போலத்தான் இருப்பான், இருக்க முடியும்.

கதைத்துணைமாந்தரும்(Minor Characters) வாழ்க்கைக்கு இயைந்தவராய் உள்ளனர். குழந்தைக்குக் குழந்தையாய், மேதாவிக்கு மேதாவியாய்த் தோன்றும் பேராசிரியர் சந்திர சேகரன்; உயிர் வளர்ச்சிக்கு இந்த நாட்டின் பழைய பண்பும், உடல் வளர்ச்சிக்கு மேலே நாடுகளின் பொருளறி வும் வேண்டும்' என்ற கொள்கையுடன் அன்பை வளர்க்கக் குற்ருலத்தில் ஒரு பள்ளி நடத்தி வரும் மாணிக்க வாசகம்: வாழ்க்கைக்கும் மனச்சாட்சிக்கும் இடையில் அகப்பட்டுத் தவிக்கும் ரங்கராஜன், அதிகாரவெறியில்அலையும் நாகசாமி; பெரிய பதவியிலிருந்தும் பண்பில் வழுவாத மகாலிங்கம்: எழுத்தாளன் என்ற போர்வையில் எழுத்துக் களவு செய்யும் பசுபதி; எடுப்பார் கைப்பிள்ளையாக வரும் குமாரசாமி, சிறுவன் பரமசிவம், மழலை மிழற்றித் தன் உடலால் தாமரை மனம் பரப்பும் குழந்தை கல்யாணி-இவர்கள் அனைவருமே உயிருள்ள பாத்திரங்கள். சடரேந்திய நாச்சியாருக்கு உயிரும் ஒளியும் அருள்வதில் இவர்களுக்கும் பெரும் பங்குண்டு. -

இவ்வளவு கதை மாந்தர் வந்தும், குறிப்பிடும் அளவிற்குத் தீயவன் (Willain) ஒருவன் இதில் இல்லை. இது இந்த நாவலின் மற்ருெரு சிறப்பு. -

நடை:

திரு. அகிலனுடைய நடை சமூகக் கொடுமைகள் எனும் பள்ளங்கள் வந்தபோது சீறி, எழுத்துத் திருட்டு முதலிய மரங்களைச் சாய்த்து, இயற்கையை வருணிக்கும் சமவெளி களிலே அமைதியாகப் பாய்கிறது. குற்ருல அருவியைப் பற்றி வருணிக்கும்போது அருவியில் மூழ்கித் திளைத்த உணர்வு ஏற்படுகிறது. ஆழமான, அழுத்தமான தெளிவான சொற்களுடன் கற்பனையும் கலக்கும்போது சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்ததுபோல் இனிக்கின்றது’ தமிழ் நாட்டு எழுத்தின் நிலையைப் பற்றி எழுதும் இடத்தில்