பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

சொல்லுவதை எழுதும் வெறும் கருவி மட்டும் அல்ல அவள்; அவன் எழுத்துள்ளேயே கலந்து அந்த எழுத்தை வளர்க் கின்ருள். உணர்ச்சி மாற்றங்களை மறைக்க முடியாமல் வெளியிடும் உமாவின் குழந்தைக் கண்கள் தணிகாசலத்தின் எழுத்துக் கற்பனைக்கு உணவாகின்றன. இறுதியில் தன்னுடைய அன்பையெல்லாம் பொழிந்த குழந்தை கல்யாணி இறந்த இடத்திலேயே மடிந்தும் போகிருள். அவள் விரும்பிய வண்ணமே அவளுடைய உயிர்க் காற்று வெறுங் காற்றுடன் கலக்காமல் தணிகாசலத்தின் மூச்சுக் காற்ருேடு கலக்கிறது. சுருக்கமாகச் சொல்லப் போனல் இதுதான் அவள் வாழ்வு! குழந்தைத்தனமாக இருந்த பெண் பெண்ணுளுள்; சந்தேகப்பட்டாள்; பொருமைகொண்டாள்; மறைந்தாள்.

தணிகாசலத்தின் வாழ்வில் குறுக்கிட்ட நால்வரில் மறைந்தவள் இவள் ஒருத்திதான். ஆனல் இலக்கியத்தில் இறவா வரம் பெற்றவளும் இவள் ஒருத்திதான். அகல் விளக்கை ஏந்தி நின்றிருந்த நான்கு பெண்கள் இருவராகி, இருவரும் ஒருவராகி ஓர் உருவாய்ச் சமைந்து போளுர் களல்லவா? அந்த ஓர் உருதான் உமா.

தணிகாசலத்தின் வாழ்க்கை இவர்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. பூப்போன்ற இதயம் படைத்த இவன் பெர்ளுர்டுஷாவைப் போல் பூக்களைப் பறிப்பதைக்கூட விரும்பாதவன். உலகத்துத் துன்பங்களெல்லாம் இவனுக்குத் தன் துன்பங்கள். உண்மை எழுத்தும் இப்படித்தானே! சூழ்நிலையில் தன்னை மறக்கும் இவன் தீமையைக் கண்டு ஒரு போதும் பொறுத்ததில்லை. இலக்கியத் திருட்டுக்களையும் தமிழ் நாட்டு எழுத்தையும், புதுமை இலக்கியத்தின் சிறப் பையும் உணராத மக்களையும் எண்ணி எண்ணிக் குமை கிருன். எழுத்தின் உண்மையை உணர்ந்து மதிக்கத் தெரிந்த ஓர் எழுத்தாளன் இன்றையத் தமிழ் நாட்டில் இருந்தால் எப்படியிருப்பான்? உறுதியாகக் கூறலாம்.