பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

  • அறிவுத் தவம் கலைகிறது. ஆனல் விதி பிரிக்கிறது. பிரித் தாலும் அவனுள் ஒடுங்கிக் கிடக்கும் எழுத்துத் திறமையைத் தூண்டி விட்டுப் போகிறது. செங்கமலத்தை வைது எழுதிய எழுத்துக்கள் அவன் முதல் கதையாகி வாசகர்களைத் தேடித் தருகின்றது.

மூன்ருவதாகக் குறுக்கிடும் பெண் கெளரி, தணிகா சலத்தின் மனைவியாகிருள். துணிவைக் காட்டவேண்டிய இடத்தில் துணிவைக் காட்டி, சீற வேண்டிய இடத்தில் சீறிப் பாய்ந்து, குழந்தை மனைவியாயிருந்தவள் பரமசிவத் திற்கும் கல்யாணிக்கும் தாயாகி, இறுதியில் உமாவிற்குத் தன் வாழ்வில் சரிபங்கும் தருகிருள்.

இறுதியாகக் குறுக்கிடுபவள் உமா. இவள் உலக இலக்கிய மேதை டால்ஸ்டாய் எழுதிய போரும் அமைதி யும்' என்ற நாவலில் வரும் நாதஷா (Natasha)விற்கு நிகரானவள். அழகும், அறிவும், உணர்ச்சியும் நிறைந்த இவள் சிடுசிடுப்பும் குதூகலமும் மாறி மாறித் தோன்றக் கூடிய ஒரு கதா பாத்திரம்.' ரசிக மணியையே கேள்விக் கேட்டுத் திணற வைக்கத் துணிவு கொண்டவள். இவள் "புரிந்து கொள்ள முடியாத புதிர். விளங்கிக்கொள்ள முடியாத விந்தைப் பெண். விலகிக் கொள்ளவும் விலக்கி விடவும் முடியாத அன்புத்தளை. நம்பிக்கையின் திரு உருவம். ஆண்டாளின் அடிவாரிசு. வானமெல்லாம் சுற்றிப் பறந்து உலகத்தின் அழகையெல்லாம் அள்ளிப் பருகத் தனக்கு இறகுகள் இல்லையே, என்று இவள் ஏங்குகிருள். ஏக்கம் கவிதையாகிறது. கவிதையில் தாஜ்மகால் பிறக்கிறது.

உமா தணிகாசலத்தின் வாழ்வில் குறுக்கிடுவதற்கு முன்னரே, தேவகியையும் கெளரியையும் நினைத்த தணிகா சலம் அடிக்கடி அவர்கள் இருவருமல்லாத ஒரு கற்பனைப் பெண்ணையும் நினைத்தான். அந்தக் கற்பனை பெண்தான் உமாவாக வந்து தணிகாசலத்தை ஆட்டிப்படைப்பதுடன் தன்னையும் ஆட்டிப் படைத்துக் கொள்கிருள். அவன்