பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 $

நாற்றம் பிடித்த குட்டைக்குப் பக்கத்தில் ஒரு தாழம்பூ மலர முடியுமானல் நமக்குள்ளே ஏன் ஓர் நல்ல சக்தி மலரக் கூடாது?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொள்கிருன். ஏழையாக இருப்பதைப் பற்றி அவன் கவலைப்படவில்லே, ஆளுல் ஏழ்மையால் வரும் அவமானத்தைத் தாங்க மட்டும் அவனுக்குப் பொறுமையில்லை. அதற்காகத் தன்மீது பிறர் இரக்கப்படுவதையும் அவன் விரும்பவில்லை.

வேண்டாம் வேண்டாம்' என்று ஒதுக்கித் தள்ளும் பொருள்கள் விடாமல் காலைப்பற்றிக் கொள்வதுதானே உலக இயற்கை அறிவுத் தவம்’ செய்ய எண்ணியவனின் வாழ்வில் நான்கு பெண்கள் குறுக்கிடுகின்றனர். தணிகா சலத்தின் உள்ளொளியைச் சுட்டிக்காட்டிய தேவகி, அதைத் துரண்டிவிட்ட செங்கமலம், அதற்கு அகலாக அமைந்த கெளரி, அகலையும் சுடரையும் சேர்த்துத் தாங்கி நின்ற உமா’-இவர்களே அந்த நால்வர்.

அவன் வாழ்வில் முதலில் குறுக்கிடும் பெண் தேவகி. அவளுடைய புருவமத்தியும், நெற்றியும், நேர்வகிடும் அவனுக்குக் காதல் உணர்ச்சிக்குப் பதிலாக லட்சிய உணர்வையே துரண்டி விடுகின்றன. தணிகாசலத்தின் உள்ளே மறைந்திருந்த மற்ருெரு மனிதனே முதலில் கண்ட வளே அவள்தான். அறியாப் பிள்ளை என்ற ஒருவனும் அறிந்த மனிதன் என்ற மற்ருெருவனும் ஆக இரண்டு பேர் சேர்ந்தவன் தணிகாசலம்’ என்று உணர்த்துபவளே அவள்

தான, - -

இரண்டாவதாகக் குறுக்கிடும் பெண் நாட்டியக் கலையில் சிறந்த செங்கமலம், தேவகியின் அழகு, பரபரப்பைத் தணிக்கும் அழகு என்ருல், இவள் அழகு ப்ரபரப்பைத் தூண்டும் அழகு. சமூகம் என்ற அணில் கடித்த பரம்பரை யிலிருந்து தப்பி வந்து அவன் மடியில் விழும் அவளை, தேவகியை வெறுத்த அதே தணிகாசலம் காதலிக்கிருன். எழுத்து கலையைக் காதலிப்பதில் வியப்பொன்றுமில்லையே!