பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

உள்ளவன். இதை நன்கு ஆராயாமல் குறையையும் பலவி னத்தையும் மட்டுமே பாாத்துவிட்டு அவனே அரை குறைப் படைப்பு' என்பதில் பொருள் இல்லை.

வாழ்வில் முற்றும் நல்லவன் என்ருே, முற்றும் தீயவன் என்ருே யாரும் இல்லை. ரிச்சர்டு கம்பர்லாண்ட் (Richard cபmberland) என்னும் ஆங்கில நாவலாசிரியர் இதைத் தெளிவாக விளக்குகிரு.ர். மனித இனத்துடன் ஒரளவு பழகிய பிறகு முழுதும் நல்லவகை ஒரு கதாபாத்திரத்தைப் படைக்க நான் முயலவில்லை. ஏனெனில் அப்படி ஒருவரை நான் சந்திக்கவில்லை. நல்ல மனிதனிடமும் ஒரு களங்கம் உண்டு; தீயவனிடமும் ஒரு நன்மைப் பொறி உண்டு' (I do not aim to draw a perfect character, for after a pretty long acquaintance with mankind I have never met with any one example of that sort......The brightest side of human nature is not without a spot, the darkest side is not without a spark-Richard Cumburland) outsià & Tsoil: srding)|Ib நாவல் ஆசிரியரின் கருத்தும் இங்கு கருதத்தக்கது. :மனிதனை உள்ளவாறே படைக்கத்தான் நான் விரும்பு கிறேன். மனிதன் நல்லவனும் அல்ல; கெட்டவனும் அல்ல. அவன் இவை இரண்டிற்கும் சிறிது அப்பாற் பட்டவன்...... இரண்டும் கலந்தவகை இருக்கும் அவன், உள் மனத்தின் சக்தியால் ஒரு சிறிது குறை கலந்த நல்லவ ஞகவோ, ஒரு சிறிது நிறை கலந்த கெட்டவகைவோ காட்சி usfjägår.” (I want to see man as he is. He is neither good nor bad. But he is something else besides.........being good and bad, he possesses an inner force which drives him to be very bad and a bit good, or else very good, and a bit bad—George Sand).

தணிகாசலம் இயல்பாகவே வெட்கம் நிறைந்தவன். உணர்ச்சியும் அறிவும் கலந்தவன். விவேகானந்தரைப் போலவும், பாதிரிமார்களைப் போலவும் திருமணம் செய்து கொள்ளாமலே, அறிவுத் தவம்’ செய்ய விழைகின்ருன்.