பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 1

மாய் வரும் குமாரசாமியும்கூடத் தமிழ் எழுத்தை எதிர் பார்க்கின்றனர்.

பேணு முனைக்கு இந்த வன்மை உண்டா என்று கேட் கலாம். அமெரிக்க நீக்ரோ மக்கள் வாழ்வில் ஒரு திருப் பத்தை உண்டாக்கியது ஒரு டாம் மாமாவின் குடில் (Uncle Tom's Cabin) தானே! பிரெஞ்சு மக்களிடையே விழிப்பேற் படுத்திய எமிலி ஜோலாவின் நாவல்களையும், ஆங்கில சமூக மறுமலர்ச்சிக்கு உதவிய டிக்கன்ஸ் நாவல்களையும் மறக்க முடியுமா?

வேருெரு வகையாகவும் பாவை விளக்கை உருவகப் படுத்தலாம். தணிகாசலத்தைத் தமிழ் நாட்டு எழுத்தாக வும், தேவகியை அந்த எழுத்துக்கு வேண்டிய லட்சிய மாகவும், செங்கமலத்தை எழுத்துக்கு இன்றியமையாத கலைப் பண்பாகவும், கெளரியை எழுத்துடன் இயைந்து நிற்க வேண்டிய அறமாகவும், உமாவை உண்மையை உரைப் பதற்கு வேண்டிய அஞ்சாமையாகவும் கூட உருவகப்படுத் தலாம். இந்தப் பண்புகளால் எழுத்து-குறிப்பாகத் தமிழ் நாட்டு எழுத்து-வளம் பெறும் என்று எண்ணத் தக்க வகையில் இந்த உருவகம் விரிகிறது.

கதைக்கும், கதை மாந்தர்க்கும் அப்பாற்பட்டுத் தெரியும் இந்த உருவகங்கள் இதை ஒரு சிறந்த உருவக நாவ லாகப் பரிமளிக்கச் செய்கின்றன. -

கதை மாந்தர்:

கதை மாந்தர் இன்றி நாவல் இல்லை. அந்தக் கதை மாந்தர் எந்த அளவில் வாழ்வின் உண்மையுடன் ஒன்றியுள்ள னர் என்பதிலேயே ஒரு நாவலின் வெற்றி அடங்கியுள்ளது.

பாவை விளக்கின் கதைத்தலைவன் ஓர் எழுத்தாளன். பெயர் தணிகாசலம். இவன் எல்லா மனிதர்களையும் போலவே பலமும், பலவீனமும், நிறையும், குறையும்,