பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

a-Q5a15& gopijl (Symbolisom)

எந்த ஒரு நாவலுமே வாழ்க்கையையோ, அது எழுந்த காலத்தையோ புறக்கணித்துவிட்டு அரும்பிவிட முடியாது. வாழ்க்கைப் பிரச்னைகள் எப்படியாவது நாவலில் இடம் பெற்றுவிடும். அவ்வாறு நுழையும் சமுதாயப் பிரச்னைகள் இரண்டு வகையில் இடம் பெறும். முதல் வகையில் கதை மாந்தரின் உரையாடல்களிலோ அல்லது அவர்கள் பண்பு நலன்களிலோ அவை வெளிப்படும். இரண்டாம் வகை நாவல்களிலோ பிரச்னைகளே கதை மாந்தராக உரு வெடுத்து விடும். இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்தது 'பாவை விளக்கு."

பாவை விளக்"கிற்கு மதிப்புரை வழங்கிய திறனுய் வாளர் திரு. அ. ச. ஞானசம்பந்தம் அவர்கள், அறிவுக்கும் உணர்ச்சிக்கும் நடைபெறும் போராட்டமாக இதை வருணித்துள்ளார். ஆழ்ந்து நோக்கினல் இதற்கும் அப் பாற்பட்ட ஒர் உருவகம் மனக்கண்ணில் தென்படும்.

தணிகாசலம் வெறும் எழுத்தாளன் மட்டும் அல்ல தமிழ் நாட்டுத் தற்கால எழுத்துக் கலையின் உருவகம் அவன் தாய்க்குலத்திற்கு இன்றுள்ள பிரச்னைகளே தேவகி, செங்க மலம், கெளரி, உமா உருவங்களில் உருவகப்படுத்தப்பட் டுள்ளன. தேவகி-வாழ்விழந்து தவிக்கும் விதவையர்கூட்டத் தையும், செங்கமலம்-அன்றிருந்த தேவதாசிகளையும், கெளரி -தமிழக இல்லத்தரசிகளையும். உமா-புதுமைப் பெண்ணே யும் உருவகப்படுத்தக் கருவிகளாய் வருகிருர்கள். தமிழ்நாட் டில் பெண்டிர்க்குள்ள நான்கு நிலைகளே நான்கு பாத்திரங் களாகப் படைக்கப்பட்டுள்ளன. தாய்க்குலத்தின் இந்த நிலைகள் தமது விடிவுக்குத் தமிழ் எழுத்துலகையே நம்பி யிருப்பதுபோல் இந்த உருவகம் அமைந்துள்ளது. இவை மட்டும் அல்லாமல் போலி எழுத்தாளர்களின் உருவகமாய் வரும் பசுபதியும், இன்றைய படத் தயாரிப்பாளரின் உருவக