பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛岛

ஏமாற்றம், வறுமை, நம்பிக்கை வறட்சி, லட்சியச் சிதைவு, போலி வாழ்க்கை, பழம் பெருமை இவற்றுடன் இன்றைய தமிழ் எழுத்து போராடும் போராட்டமே 'பாவை விளக்கு , '

இந்தக் கரு உருவாக நான்கு பெண்கள் எழுத்தாளன் தணிகாசலத்தின் வாழ்வில் குறுக்கிடுகின்றனர். இவர்கள் ஐவரின் கூட்டிலே எழுந்த இன்பதேம்தான் பாவை விளக்' காய்ச் சுடர் விடுகிறது. இதை தாவலாசிரியரே தம்முடைய முன்னுரையில் கூறியுள்ளார்: 'எனக்கு எதிரில் இருந்த தணிகாசலத்துக்குப் பதிலாக அந்த இடத்தில் குளுமையான ஒரு விளக்கொளி சுடர் விடுவதைக் கண்டேன். நான்கு பெண்கள் ஒன்று சேர்ந்து அகல் விளக்கொன்றைத் தங்கள் மென் கரங்களில் ஏந்தி நிற்பதுபோன்ற பிரமை. கண்களே நன்முகக் கசக்கிவிட்டுக் கொண்டு கவனித்தேன். நான்கு பெண்களும் ஒருவரில் ஒருவர் மறைந்து இரண்டு பெண் களாஞர்கள். பிறகு அந்த இருவருமே ஒருவரில் ஒருவர் ஒன்றி ஒரே உருவாய்ச் சமைந்து பாவை விளக்காஞர்கள்-' இதுதான் பாவை விளக்கின் உரு. -

இந்த உரு தெளிவாகத் துலங்க வருமுன் உரைத்தல் முதலிய நாவல் உத்திகளும், நிகழ்ச்சிக் கோவையும், ஆவலேத் துரண்டும் வகையில் அமைந்த தணிகாசலம் கண்ட தாஜ்மகால் தோற்றமும், சுவைமிக்க உரையாடல்களும் உதவுகின்றன.

கோயிலின் உட்பிரகார வாயில் முகப்பில், கரங்களில் வண்ணச் சுடரேந்தி, அன்பும், அருளும், பக்தியும் கனியும் கண்களோடு ஒளி பரப்பி நிற்கும் வண்ணச் சிலேப் பெண் னழகை-ஐம்பொன் பாவை விளக்கை-பார்த்திருக்கிறீர் களா? அந்தத் தோற்றமும், தோற்றத்தைக் கடந்த அமைதியும், அருளும் இந்தப் பாவை விளக்கிலும் உண்டு. - . . .