பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

தமிழ்த் தென்றல் திரு. வி. க. அவர்கள். அதே கலேயைப் படைப்பு இலக்கியத்தில் கையாண்டு வெற்றி பெறுகிருர் திரு. அகிலன் என்று கூறலாம். பெண்மையின் மென்மை யும், நளினமும், நெளிவும்; ஆண்மையும் திண்மையும், வன் மையும், தெளிவும் கலந்த எழுத்துக்கள் திரு. அகிலனின் எழுத்துக்கள்.

இந்த இரண்டு தனித் தன்மைகள் திரு. அகிலனின் இலக்கியப் படைப்புக்களுக்கே உரிய தனிச் சிறப்புக் களாகும். -

பாவை விளக்கு:

நாவல்களிலே இரண்டு வகை உண்டு. முதல் வகை நாவல்களிலே நிகழ்ச்சிகள் அடிப்படையாக இருக்கும். இரண்டாவது வகை நாவல்களிலே உணர்ச்சிப் போராட்டங் களுக்கே முதலிடம் இருக்கும். மனவியல் அடிப்படையில் எழுந்த உணர்ச்சிப் போராட்டங்கள் நிறைந்த நாவலே டாவை விளக்கு. மனவியலே மையமாகக் கொண்டு தமிழில் மலர்ந்துள்ள நாவல்களில் பாவை விளக்"கிற்குத் தனி இடம்

உண்டு.

கருவும் உருவும்:

பாவை விளக்கு: எழுத்தாளன் ஒருவனின் வாழ்க்கை யைக் கருவாகக் கொண்டு பின்னப்பட்ட நாவல். எழுத் துக் கலை எளிதல்ல; கடினமான ஒன்று கல்லைச் செதுக்கிச் சிலை வடிப்பதைப் போல, வாழ்க்கையின் உண்மைகளைச் சொல்லால் செதுக்கிக் கற்பனையாக்க வேண்டிய கலை. அதிலும் தமிழ் நாட்டு எழுத்தாளனுக்கு எத்தனையோ பிரச் னைகள். தமிழ் நாட்டில் துணி வெளுக்கக் கூலியுண்டு; மனம் வெளுக்கக் கூலியில்லே ஏழைகளாக இருந்தால்தான் எழுத முடியும் என்ற எண்ணம் வேறு எப்படியோ பரவி விட்டது.