பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

அன்பு நூல் இழையோடுவதாலேயே அவருடைய இலக்கியப் படைப்புக்கள் அனைத்துமே ஒரே வகை என்று கூறிவிட முடியாது. மலர்கள் என்பதாலேயே முல்லையும் மல்லிகையும் ஒன்ருகிவிட முடியுமா? முல்லை, மல்லிகை, இருவாட்சி, தாமரை, தாழம்பூ, மனேரஞ்சிதம் முதலிய பல்வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் மலர்க்காடு திரு. அகிலனின் இலக்கியப் படைப்புக்கள்.

பாசம், பக்தி, அருள், காதல் முதலிய பல்வேறு அன் பின் வடிவங்களில் இந்த நாவலாசிரியர் சிறப்பாகக் கையாள் வது காதலைத்தான். அவருடைய சொற்களிலேயே கூறி ளுல் 'காதல் இந்த நாட்டின் வேற்றுமைக்கு அருமருந்து: அன்புப் போர் புரிவதற்குக் கூர்மையான மலர்க்கண அது." தம்முடைய காதல் கதைகள் எப்படிப்பட்டவை என்பதை யும் தணிகாசலத்தின் மூலமாக வெளிப்படுத்துகிருர் ஆசிரி யர்: "நான் இரண்டு வகைக் காதல் கதை எழுதுகிறவன்; கல்யாணத்துக்கு முன்புள்ள காதலே எழுதி இந்த நாட்டில் உள்ள சாதி, சமயம், குலம், கோத்திரம், பணம்-இவற்ருல் ஏற்படும் வேற்றுமைகளைக் குறைக்க விரும்புகிறேன். கல் யாணத்துக்குப் பின்பு உள்ள காதலே எழுதிக் குடும்பங்களின் கட்டுக்கோப்பை வளர்க்க விரும்புகிறேன்' காதலைச் சிறப் பாகக் கையாண்டாலும் மனிதன்மீது, மனிதாபிமானத்தின் மீது, சமூகத்தின்மீது, உலகத்தின்மீது பொழிய வேண்டிய, அன்பையும் சமயம் வாய்க்கும்போது திரு. அகிலன் வற் புறுத்தத் தவறுவதில்லை. -

இரண்டாவது, பெண்மை கலந்த அவருடைய எழுத் துக்கள். பெண்மை கலந்த ஆண்மைக்கு என்றுமே தனி மதிப்பும் மரியாதையும் உண்டு. பெண்மை கலந்த புத்த னின் அமைதித் தோற்றத்தை மறக்க முடியுமா? அவருடைய கொள்கைகள் மக்களிடம் பரவ அவருடைய தோற்றமும் ஒரு காரணம் என்பது வரலாறு காட்டும் உண்மை. நம் முடைய தமிழில் பெண்மை கலந்த ஆணித்தரமான எழுத் துக்களைக் கட்டுரை வடிவில் தந்து மக்கள் மனங்கவர்ந்தவர்