பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛份

போது ஏதோ ஒர் உண்மையின் பொறி தட்டுப்பட்டாற் போலிருந்தது. தம்முடைய எழுத்தின் அனுபவத்தையே தணிகாசலத்தின் மூலம் உணர்த்துகிருரோ என்ற எண்ணம் கூடவந்தது. வாழ்க்கையின் அனுபவ வெளியீடுதானே இலக்கியம்?

༣་༩

இரண்டு தனித் தன்மைகள்:

திரு. அகிலனின் இலக்கிய படைப்புக்களுக்கு இரண்டு தனித் தன்மைகள் உண்டு.

முதலாவது அன்பின் ஆட்சி. உலகத்தின் பிரச்னைகளுக் கெல்லாம் அன்பு ஒன்றையே அருமருந்தாகக் காண்பவர் திரு. அகிலன். அன்பின் வழியது உயிர்நிலை’ என்ற வாக் கிலே அசைக்க முடியாத நம்பிக்கையுடையவர். சிறு கதை களாயினும் சரி, நாவல்களாயினும் சரி, அவருடைய அன்புப் பிரச்சாரத்தை நெடுகக் காணலாம். அன்பின் வலிமை, அன்பின் பெருமை, அன்பின் ஆழம் இவருடைய இலக்கியப் படைப்புக்களில்போல் வேறு எங்குமே அவ்வளவு வற்புறுத் தப்படவில்லை. தமிழ் நாவல்களிலேயே அன்புப் பிரச் சாரத்தை இந்த அளவு மேற்கொண்டவை திரு. அகிலனின் நாவல்கள்தாம் என்று துணிந்து கூறலாம். அன்பு செய்யக் கூட நாள்தோறும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வாழ்வில் இன்பம்’ என்ற தம்முடைய நாடகத்தில் அறி வுரை கூறும் திரு. அகிலனின் இலக்கியப் படைப்புக்கள் அனைத்துமே அன்பு என்ற அடித்தளத்தின்மீது கட்டப்பட்ட பிரம்மாண்ட மாளிகைகளாகும். ஒருவர் மற்ருெருவர்மீது சொரியும் அன்பு மழையில் விளைந்த பூசல்களும் போராட் டங்களுமே அவர் படைத்த இலக்கியத்தின் கருப் பொருள்கள். மற்ற படைப்புக்களைக் காட்டிலும் பாவை விளக்’கில் பூசல்களின் பின்னணியில் எழும் மனப் போராட் டங்களை அழியா ஒவியங்களாகத் தீட்டி வெற்றி கண்டுள் ளார் திரு. அகிலன் என்று கூறலாம். r