பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᎦᏪ

பல வருஷங்கள் வாழும் வாய்ப்புப் பெற்ற ராஜம் கிருஷ் னன் அவர்கள்.

சிறுகதை என்ற பெயரில், பல சம்பவங்களின் கோவை யான ஒரு நாவல் சுருக்கத்தைக் கொடுத்தாலும் சப்புக் கொட்டும் வாசகர்கள், இதோ ஒரு நாவல்’ என்று சொன்னவுடன் எவ்வளவோ விஷயங்களை எதிர்பார்க்கிருர் கள் என்று தெரிகிறது! இரண்டு மூன்று தலைமுறைகளின் சரித்திரங்களை ஆர அமரச் சொன்னுல்தான் இன்றைய பத்தி ரிகை படிக்கும் வாசகர்களுக்கு ஒரு மனநிறைவு ஏற்படுகிறது போலும்! ரகு வம்சம் எழுதிய காளிதாசன இவர்கள் லட்சிய எழுத்தாளகைக் கொண்டிருந்தால் அதில் வியப் பென்ன இருக்கப் போகிறது? ராஜாம்பாள், பத்மாவதி, பிரதாப முதலியார் சரித்திரங்கள் அளந்துகாட்டிய கால ஒட்டத்தைவிட நீளமான ஒரு காலகதியில், அந்தச் சரித்திர ஆசிரியர்களை முன்னேடியாகக் கொண்ட இன்றைய நாவ லாசிரியர்கள், தங்கள் நாவலைச் செவ்வையாகச் செலுத்தப் பழகிக் கொண்டுள்ளார்கள். .

பன்னிரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நீலக்குறிஞ்சி மலர் பூக்கும் அந்த நாட்டில் அந்த மகாமக காலத்தைக் குறிஞ்சி என்றே குறிப்பிடுகிரு.ர்கள். அந்த அளவின்படி இந்த நாவலில் நான்கைந்து குறிஞ்சிகளின் காலம் குறிக்கிடு கிறது. முதல் அத்தியாயத்தில் ஒன்பது வயதுப் ப்ைபகை இருந்த ஜோகி, நாவலின் கடைசி அத்தியாயத்தில் 'ஐந்து குறிஞ்சிகளைக் கண்ட ஜோகிக் கிழவராகக் காட்சியளிக் கிருர், ஜோகியினுடைய தோழனை கிருஷ்ணனுடைய பேத்திக்கும் அவனுடைய பிள்ளைக்கும் திருமணம் நடப்ப துடன்தான் கதை முடிகிறது.

இரண்டு தனித் தெய்வங்களுக்கிடையே எழும் பூசல்கள், இரண்டு அரக்கர்கள் அல்லது இரண்டு மாமன்னர்களுக் கிடையே தோன்றும் மனக் கசப்புகள் புராணக் கதை களுக்கோ, இதிகாசங்களுக்கோ வித்திட்டால், இன்று, இரண்டு அரசியல் கட்சிகளுக்குள் அல்லது இரண்டு குடும்பங்