பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 0 0

களுக்குள் ஏற்படும் மன விகாரங்கள் சுவாரஸ்யமான சம்ப வங்களேக் கொண்ட நாவல்களுக்கு அஸ்திவாரமாகின்றன. ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் , பெர்ல்பர்க்கின் 'குட்எர்த் , க. நா. சுப்பிரமணியத்தின் பொய்த் தேவு” இம் மூன்று படைப்புகளுக்கும் ஜீவாதாரமான உயிர்த் தத்துவம் இந்தக் குறிஞ்சித் தேன்’ நாவலில் துடிப்போடு இயங்குவதைக் காணலாம்.

கதைச் சுருக்கத்தைச் சற்று விரிவாகவே பார்க்கலாம். உதகை நகருக்கு அருகில், தேவர்பெட்டா மலைச் சிகரத்தின் பார்வையில் உள்ளது மரகதமலே ஹட்டி’ எனும் கிராமம். இதில் லிங்கையன் எனும் தெய்வ பக்தியும், தயையும் நிறைந்த பெருமகனுக்கும், அவன் மனைவி மாதிக்கும் பிறந்த ஜோகியும், லிங்கையனுடைய அண்ணன் மாதனுடைய பிள்ளை ரங்கனும், ஹட்டியின் மணியக்காரர் கரியமல்லரின் பெண் வயிற்றுப் பேரனை கிருஷ்ணனும் கிட்டத்தட்ட ஒரே வயதுடைய தோழர்கள். இம்மூவர் வாழ்க்கையின் மேடு பள்ளங்களையும், ஆசாபாசங்களையும் விவரிப்பதே இந்த நாவலின் நோக்கம்.

ஜோகியின் மாமன் மகள்தான் பாரு. ஐந்து வயதுச் சிறுமியாகச் சிவந்த குண்டு முகம், கருவண்டு விழிகள், சுருட்டையான தலைமுடி’ என்று அறிமுகம் செய்து வைக்கப் படும் பாருவின் முறைப் பையன்களான ஜோகியும், ரங்க னும் அவள்மீது காதல் கொண்டிருந்தாலும் பாருவின் மனம் கிருஷ்ணனையே நாடுகிறது. பாரு யாரை மணம் புரிவது என்ற சிக்கல் ஏற்படும்போது ஊர்ப் பெரிய மனி தர்கள் வைக்கும் ஒரு பலப் பரீட்சையில் ரங்கன் வெற்றி யடைந்து பாருவின் கணவனுகிருன், -

ஜோகி தந்தையின் அடிச்சுவட்டில் வாழும் கர்மவீரன். ரங்கனே அவனுடைய தந்தை மாதனப்போலக் குடிகார கை இருந்ததுடன் எந்தத் தீய செயல்களுக்கும் அஞ்சாத ஒரு மனப்பக்குவத்தை உதகையில் அரசு செலுத்திய வெள்ளைக்காரச் சீமான்களின் அடிவருடிப் பிழைப்பை