பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101

நடத்தத் தொடங்கியதுமே பெற்று விட்டான். கிருஷ்ணன் வசதி நிறைந்த குடும்பத்துப் பையனைதால் வக்கீலுக்குப் படித்துப் பொதுவாழ்வில் நுழைந்து பங்களாக்களும், வாகனங்களுமாக ஓங்கி வளர்ந்து விட்டான்.

பாருவின் வாழ்வு பாழானலும் அவள் தன் கணவனுக்கும் கிருஷ்ணனுக்கும் மோதல் நிகழாமல் பாடுபடுகிருள். இதன் நடுவில் ஜோகி கிரிஜையை மணக்க அவள் நஞ்சன் எனும் குழந்தையை ஈன்று புறந்தந்துவிட்டு இறந்து விடுகிருள். கிருஷ்ணன் ருக்மிணி சமேதகை, நடத்திய வாழ்வில் நிறைவு கண்டாலும், பாருவைச் சந்திக்கும்போதெல்லாம் பிள்ளைப் பிராயத்து நிகழ்ச்சிகள் நெஞ்சைப் பேதுறச் செய்யாமலில்லை. லிங்கையனும் ஜோகியும் பழமையின் பிரதிநிதிகள் என்ருல், மாதனும், ரங்கனும் புது நாகரிகத்தின் புரையோடிய பகுதிகளுக்குப் பிரதிநிதிகள். கிருஷ்ணனே நாகரிகத்தின் சகல நன்மை களுக்காகவும் வக்காலத்து வாங்கியவன். இந்த மும்முனைப் போராட்டத்தின் நடுவில் பாரு சிக்கிச் சுழல்கிருள்.

உணவுப் பண்டங்களான சாமையும், கிழங்கும் பயிரான பூமியில் தேயிலை பயிரிடும் மோகம் அந்தப் பிராந்திய மக்களைப் பிடித்துக் கொள்கிறது. இத்துடன் அமையாமல் வளம் கொழிக்கும் வயல்களில், பள்ளிக்கூடங்களும் தேயிலைப் பாக்டரிகளும் கட்டப்பட்டு உணவு உற்பத்தி குறைகிறது. மின் விசைக்கான நீர் தேக்கப்படும்போது பல வயல்கள் மூழ்கடிக்கப்படும் நிலைமையும் உண்டாகிறது. இந்தப் பொருளாதாரப் பிரச்னையுடன் நாட்டின் விடுதலை சம்பந்தப்பட்ட அரசியல் பிரச்னேயும் நாவலுக்குச் சுவை யுடன் சூடும் சேர்க்கின்றன. -

லிங்கையன் அமைதியான தியாக மரணம் எய்துகிருன். கிருஷ்ணனின் பேத்தி விஜயாவும் ஜோகியின் மகனும், பாரு வின் வளர்ப்பு மகனுமான நஞ்சனும் மணம் புரிகிருர்கள். பாரு, தியாகத்தின் திருவுருவம், வறுமையில் வாடிய மலர்க்