பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 0.2

கொடி. அமைதியாக நிலமகளின் மடியில் உயிர் நீக்கிருள். இதற்குமுன், இந்த நாவலுக்கு ஒரு வில்லன் போலவே வாழ்ந்த ரங்கன் எல்லா வில்லன்களைப் போலவே பயங்கர மான முடிவை எய்துகிருன் நஞ்சன்-விஜயா ஜோடி இணைந்து இன்பமாக வாழ்வதைக் கண்டு ஜோகி ஆனந்தக் கண்ணிர் பெருக்குகிருன்.

"மண்ணிலும், மந்தையிலும் உயிரை வைத்த லிங்கை யனுடைய பாத்திரம் இந்த நாவலுக்கு அச்சாணி, ஆணி வேர் போன்றது. எதிர்ப் படைப்பு என்று ஒன்றில்லாவிட் டாலும் கூட சோபிக்கும் தெம்பு கொண்ட விங்கையன் குணச்சித்திரத்தைக் குன்றின் மேலிட்ட விளக்காகக் காட்டு வதற்காகவே போல் ஆசிரியர் அவருடைய சகோதரன் மாதனையும் படைத்துள்ளார். பாருவின் வெள்ளிக் காப்பை எடுத்துக் கொண்டு சிறு பருவத்திலே உதகைக்கு ஒடிப் போன ரங்கன் வாலிப் பருவ வயதில், நாலு காசு சேர்த்த மிதப்பில் ஊருக்குத் திரும்புகிருன், அணைக்க வேண்டிய சிற்றப்பனின் கைகள் அவன் கன்னங்களில் பாய்ந்து அறைந் தன. பழங்கள் எனச் சிவந்த கண்களுடன் வெறிக் குரலில் விங்கையா கத்தினர். எங்கேடா வந்தாய்? திருட்டுப் பயலே! போடா, போய்விடு, என் கண் முன் நிற்காதே. நீ இந்த வீட்டுப் பையன் அல்ல! போ, போய்விடு. சிறு மையைக் கண்ட விடத்துச் சிறி எழும் அந்த நல்ல ஆத்மா படும் வேதனையை இந்த இடத்தைப் படிக்கும் ஒவ்வொரு வாசகனும் உணரும் வகையில் ஆசிரியர் எழுதி இருக்கிரு.ர்.

சற்று வேடிக்கையாகக் கூட இருக்கலாம், இந்த நாவலின் முக்கிய புருஷன் யார் என்ருல் வில்லகை வரும் ரங்கனத்தான் குறிப்பிட்டுக் காட்ட வேண்டி யிருக்கும். கதாநாயக பாத்திரம் இரண்டு பட்டதால்-ஜோகியும், கிருஷ்ணனும் கதாநாயகியான பாருவைக் காதலித்த ஒரே காரணத்தால்-கூத்தாடி வில்லனுன ரங்கன்பாடு கொண் டாட்டமாகி விட்டது. எண்ணத்தாலும் செய்கையாலும் கதா போக்கிரியான அவனுக்குக் கதாநாயகியான பாருவை