பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103

மணக்கும் பாக்கியம் கிட்டியதும் அவன் அந்தஸ்து உயர்ந்து விட்டதும், ஜோகியும், கிருஷ்ணனும் வாசகர்கள் மனத்தை ஆக்கிரமிக்காத அளவுக்கு ரங்கன் நாவல் முழுவதும் நட மாடி, வாசகர்களே நயத்தாலும், பயத்தாலும் அடிமைப் படுத்தி விடுகிருன்! லிங்கையனிடம் பண உதவி பெற்றுக் கொண்டு சில கடன்களைத் தீர்க்க உதகைக்கு ஒடிச்சென்ற ரங்கனைத் துரத்திச் செல்கிறது சிற்றப்பா லிங்கையனின் மரணச் செய்தி. நாம் நினைக்கிருேம் ரங்கன் எங்கே வரப் போகிருன் இறுதி மரியாதைக்கு என்று. ஆனல் நம்மை ஏமாற்றிவிட்டு ரங்கன் ஹட்டிக்கு வரவே செய்கிருன்!

பாருவின் பாத்திரம் வாசகர்கள் அனுதாபத்தைப் பெருமளவுக்குப் பெற்றதைப் போல வேறு இலக்கியக் கதா நாயகி பெற்றிருப்பாளா என்பது சந்தேகமே. மூன்று குளம் வெட்டினேன் இரண்டு பாழ் ஒன்றில் தண்ணிரே இல்லை என்று வேடிக்கையாக ஒரு வசனம் வழங்குகிற தல்லவா? இந்த வசனத்துக்கு எடுத்துக் காட்டே போல் பிறந்து வளர்ந்த பாருவின் வாழ்வில் பெரும்பாலும் விசனமே மேலாடி நின்றிருக்கிறது. பாருவை அவளுடைய இரண்டு முறைப் பையன்களான ஜோகியும், ரங்கனும் காதலிக்க, அவளோ கரிய மல்லரின் பேரனும் சுனையில் விழுந்த தன்னைத் தூக்கிக் கரை சேர்த்த நாகரிக வாலிபனு மான கிருஷ்ணனிடம் மனதைப் பறி கொடுத்துவிடுகிருள். ஆனல் வாழ்க்கையில்விட இத்தகைய நாவல்களில் அதிக மாக விளையாடும் விதி வேண்டுமென்றே சதி செய்துவிடு கிறது முறைப் பையன் ஒருவனத்தான் பாரு மணம் செய்து கொள்ள வேண்டுமென்ருல் அவளுடைய அழகுக்கும் குணத்துக்கும் ஜோகிதான் சமானமானவன். அவனைவிட்டு வேறு ஒருவனைத்தான் மணம் புரிய வேண்டுமென்ருல் கண்ணுக்கு இனிய காதலன் கிருஷ்ணனே அவள் கைப்பிடித் திருக்க வேண்டும். இந்த இருவருக்கும் கிடைக்காத அதி ருஷ்டம்,ரங்கனுக்குக் கிடைத்தது. இந்த மூவரில், தகுதியே இல்லாதவனுக்குப் பாருவின் கணவன் எனும் பதவி