பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 0 5

முடியாது. அவளுடைய உலகின் ஆனந்தப் புரட்சி நஞ்சன். நாளை அந்த மலையிலே, அவன் கூறிய செல்வங்களெல்லாம் பெருகினல், அவளைப் பொறுத்த மட்டில் அவற்றுக் கெல்லாம் காரண கர்த்தா, அவளுடைய மகன். அவ னுடைய குரலின் ஆனந்த ஒளியில் அவள் இருதயம் நிறைந்து குளிர்ந்து விட்டது. அவன் எது பேசினலும் அவளுக்கு உகந்ததே.'

ஜோகியின் மன நிலை வேறு. பழமையைப் போற்று வதில் அவன் பிடிவாதக்காரன். வெளியுலகச் சந்தடிகளும், வண்ண வாசனைகளும், போலி மினுக்கல்களும் மரகதக் குன்றுகளின் காவலை மீறி உள்ளே புகுந்து விட்டன. அந்த மலைவாழ்நரின் அமைதியையும், நிறைவையும் குலைத்து விட்டன என்பது அவன் தீர்மானம். ஆகையால் அவன் கேட்கிருன். 'நிறைய நிறையப் பேருக்குச் சாப்பாடும் துணியும் கிடைக்குமா? இருக்கிறவர்கள் சாப்பாட்டில் மண்ணைப் போடுவது உங்கள் படிப்பு. உங்களைப் போல் படித்தவர்களுக்கு வேலை கொடுக்க, இம்மாதிரி கல்லையும் மண்ணையும் துளைத்து, பூமித்தாயை மானபங்கம் செய்கி மூர்கள். பணம் பணம் என்று மக்கள் பேயாய் அலை கிருர்கள். பணமும் மண்ணும் ஒன்ருகுமா?' 'முன் னேற்றம் வந்திராத நிலையிலே அவர்கள் ஹட்டியிலே என்ன மேன்மை குறைந்திருந்தது? உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வித்தியாசம் இருந்ததா? உன் நிலம் என் நிலம் என்று காய்ந்தார்களா? ஒருவர் பட்டினி கிடக்க ஒருவர் கொழித்த துண்டா? ஒரு வீட்டில் வாழ்வோ தாழ்வோ வந்தால் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்ததுண்டா? அத்தனை மேன்மைகளையும் அழித்தது எது? சாமையும், திணையும், பாலும் போதா என்ற காலம் வந்தல்லவோ எல்லாவற் றையும் அழித்தது? கிழங்கும், தேயிலையும் கொண்டு வந்த பணமல்லவோ அழித்தது? சட்டையும், சராயும் புகுந்த நாகரிகம் அல்லவோ அழித்தது? பொன்னும் பட்டும்

நா-7