பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

புகுத்திய மோகமல்லவோ அழித்தது?’ ஜோகியின் கேள்வி களுக்கு யாரால் பதில் கூற முடியும்? கான்யூட் அரசனைப் போல, நாகரிகத்தின் மோதும் அலைகளைப் பார்த்து என்னைத் தீண்டாதே! என்று சொல்லும் அப்பாவிதான் ஜோகி.

கிருஷ்ணன் அன்று பாருவை மட்டும் கரை சேர்க்க வில்லை. அநாகரிகச் சேற்றில் அழுந்திப் பழமைக் குட் டையில் ஊறிய மட்டைகளாக இருப்பதே மகா ஆனந்தம், சாயுஜ்யம் என்றிருந்த மக்களுக்குக் கல்வியறிவு அளித்து அவர்களைப் புற உலகுக்கு அழைத்துச் சென்றவர்களின் முன்னுேடி அவன். பாருவுக்குக் கூடத் தெரியாமல், நஞ்ச னுடைய படிப்புக்கு ராமன் மூலம் உதவியது அவனுடைய பெருந்தன்மைக்கு ஓர் எடுத்துக் காட்டு. சகல விதங் களிலும் பாருவை அடைந்து அனுபவிக்கும் யோக்கியதை அவனுக்கிருந்தும் நல்லூழ் துணை செய்யாத காரணத்தால் அந்த இன்பம் அவனுக்குக் கானல் நீராகி விடுகிறது. கதா சிரியர், கிருஷ்ணன் பாருவை கூடாக் காதலைப்பற்றிக் குறிப்பிட வாய்ப்பு கிடைக்கிறது. எத்தனையோ ஆண்டு களுக்கு முன்பு அவர் (கிருஷ்ணன்) உள்ளத்தில் ஒருத்தி (பாரு) புகுந்து கொண்டு நினைவைச் சிவிர்க்கச் செய்தாள்; கனவுகளில் எல்லாம் நிறைந்து நின்ருள். அவள் இருந்த இடம், அவர் உள்ளத்தில் தழும்பாக மேடிட்டுக் காய்ந்து விட்டது. ஆனல் இந்த நினைவு மாருத வடுவாயிற்றே!'

திருமதி ராஜம் கிருஷ்ணன், இந்த நாவலில், நீல சிரியின் பழங்குடி மக்களான படகர்களின் வாழ்க்கை முறை களையும், அவர்களின் லட்சியம், கோட்பாடுகளையும் நமக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிருர். பழமைக்கும், புதுக் கருத்துகளுக்கும் இடையே ஏற்படும் தத்துவப் போராட் டத்தையும், அந்தப் போராட்டத்தில் பலியாகும் பாத்திரங் களையும் உயிருள்ளனவாகப் படைத்துத் தந்திருப்பதைப் பார்த்தோம். சுற்றுச் சூழ்நிலைகளை இயற்கையாக அவர் வர்ணிக்கும் பாணி சிறப்புடையதாகவே இருக்கிறது.