பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10?

நீலகிரி மன்னின் வாசனையுடன், நீலகிரி காற்றில் கலந்து வரும் யூகலிப்டஸின் நெடியுடன், தேயிலையின் மனேகரமான மனத்தையும் நம் நாசிகள் நுகர்ந்து இன்பமடைகின்றன. காய்ச்சலில் கிடந்து புது இரத்தம் ஊறும் உடல் போல, வறண்ட மரங்களிலெல்லாம் புதுத் தளிர்கள் தோன்றின. காய்ந்து கிடந்த புல் தரை எல்லாம் திரை கடலோடித் திரும்பும் தந்தையை வரவேற்கத் துள்ளி வரும் இளம் குழந்தைபோல் தளிர்த்துச் சிரித்தது. சின்னஞ்சிறு வண்ண மலர்கள், புல்லிடுக்குகளில் எட்டிப் பார்த்து அடக்கமான பெண் குழந்தைகளைப் போல், இளம் வெயிலில் கள்ளமிலா நகை புரிந்தன, 'சுருட்டுப் புகை வெளியே அலையும் கரு மேகம் உள் வந்து விட்டதோ என்று ஐயுறும்படி சூழ்ந்தி ருந்தது, வானம் நிர்மலமாக, ஆயிரமாயிரம் தாரகைக் குழந்தைகள் விளையாட்டுத் தடாகமாக விளங்கியது' என் பனபோன்ற வர்ணனைகள் நாவலின் அழகுக்கு அழகு சேர்க் கின்றன.

பத்திரிகை ஒன்றில் தொடர் கதையாக வெளி வந்த தாலேயே இதன் இலக்கியத் தரத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. விச்சிராந்தியாகப் படித்து, ரசித்து வாசகன் பெருமைப்பட வேண்டிய நாவல் குறிஞ்சித்தேன். இந்த நாவலின் மூலம் நீலகிரியும் உதகை நகரும், படக மக்கள் சமூகமும் மேலும் உயர்ந்து தோன்றுகின்றன என்றே எனக்குத் தோன்றுகிறது.