பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்ரும் நாள் தலைமை உரை

கு. அழகிரிசாமி

தமிழ் எழுத்தாளர்கள் எழுதிய நாவல்களைத் தமிழ் எழுத்தாளர்களைக் கொண்டே விமர்சிக்கச் செய்யும் இந்த நாவல் விழாவைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்திருப்பது மிகமிகப் பாராட்ட வேண்டிய ஒரு காரிய மாகும். இது எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும், நாவல் படைப்புக்கும் பெரிதும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன், மொழிபெயர்க்கப்பட்ட வங்காளி நாவல்களும், மராத்தி நாவல்களுமே, தமிழ் நாட்டில் அதிகமாக விற்பனை யாகிக் கொண்டிருந்தன. அப்போது இங்கே இரண்டொரு எழுத்தாளர்களைத் தவிர வேறு யாரும் நாவல் எழுதவில்லை. சிறு கதைகளையே மிகுதியாக எழுதி வந்தார்கள். அதன் பிறகு நிலைமை மாறியது. நாவல்கள் எழுதுவதில் தமிழ் எழுத்தாளர்கள் இப்போது தீவிரமாக ஈடுபட்டிருக்கிருர் கள். பிரபலமான பத்திரிகைகளில் ஒரே சமயத்தில் மூன்று தமிழ் நாவல்கள்கூடத் தொடர் கதைகளாக வெளிவரு இன்றன. புத்தக மார்க்கெட்டிலும் தமிழ் நாவல்களே அதிகம் விற்பனையாகின்றன. இன்று எழுத்தாளர்கள் மேலும் மேலும் நாவல்கள் எழுதுவதைப் பத்திரிகைக்காரர்