பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 09

களும் புத்தக வெளியீட்டாளர்களும் வாசகர்களும் விரும்பு கிரு.ர்கள். நாவல் எழுதுகிறவர்களுக்கு இன்று நல்ல வரவேற்பும், சாதகமான சூழ்நிலையும் இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் தமிழ் நாவல்கள் ஏராளமாக வெளி வந்து கொண்டிருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

பெரும்பாலான தமிழ் நாவல்கள் பத்திரிகைகளில் தொடர் கதைகளாக வெளிவந்தவையே ஆகும். தொடர் கதைகளுக்கு ஏற்பட்ட அபரிமிதமான தேவையினல்தான் நாவல்கள் பெருகி யிருக்கின்றன என்றும், பெருகி வரு கின்றன என்றும் சொல்லலாம். தொடர் கதைகளாக வெளிவந்தவை என்ற ஒரே காரணத்திற்காக அவை அனைத்துமே அசல் நாவல்களல்ல, இலக்கியத்தரம் உடை யவையல்ல என்று ஒதுக்கிவிட முடியாது. அதே சமயத்தில், தொடர் கதைகளாக வெளிவராமல் புத்தகமாகவே வெளி வந்துள்ள எல்லா நாவல்களையுமே இலக்கியப் ப்டைப்புக்கள் என்று சொல்லிவிடவும் முடியாது. இரண்டிலும் இலக்கியத் தரம் உடையவையும் உண்டு; இல்லாதவையும் உண்டு.

ஒவ்வொரு தமிழ் நாவலின் தராதரங்களையும் விமர் சனம் செய்வது இன்றைய நிலையில் ஒர் அவசியமான காரிய மாகிவிட்டது. ஏனென்ருல் அதிகமாக விற்பனையாகும் பத்திரிகைகளில் வெளிவந்து, அதிகமான வாசகர்களால் படிக்கப்படும் நாவல்களே சிறந்தவை என்ற ஒரு மனப் பான்மையும், அப்படியில்லாமல் புத்தகங்களாக வெளி வந்தவையே சிறந்த நாவல்கள் என்ற ஒரு எண்ணமும் இன்று இருந்து வருகின்றன. ஒரு நாவலின் சிறப்பை இம்மாதிரி அளவு கோல்களால் கண்டறிய முற்படுவது இலக்கியத் துறைக்கே ஆகாத ஒரு காரியமாகும். இது போன்ற தவருண மனப்பான்மைகளை நாவலாசிரியர்களிட மிருந்தும், வாசகர்களிடமிருந்தும் போக்குவதற்கு இப்படிப் பட்ட விமர்சனக் கூட்டங்கள் பெரிதும் துணை புரியும். இங்கு விமர்சகர்களால் வெளியிடப்படும் கருத்துக்கள் குறித்து அபிப்பிராய பேதங்கள் இருக்கலாம்; இருக்கவும் வேண்டும்.