பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 - 0

ஆளுலும் நாட்டில் இப்படிப்பட்ட கருத்துக்களை உடையவர் களும் இருக்கிரு.ர்கள் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு இந்தக் கூட்டம் வாய்ப்பளிக்கிறது. அந்த அளவில் பயனும் தருகிறது என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தானே வேண்டும் ?

ஒளிவு மறைவு கூடாது :

தமிழ் நாட்டில் விமர்சகர்கள் தங்கள் கருத்துக்களைத் தக்க காரணங்கள் காட்டி ஆணித்தரமாகவும், ஒளிவு மறை வின்றியும் எடுத்துரைக்க வேண்டும். இப்பொழுது தங்க ளுக்கு வேண்டிய நாவலாசிரியர்களை விண்ணுக்கு உயர்த்தி, தமிழில் உள்ள அத்தனை புகழுரைகளையும் அடுக்கிப் பாராட்டும் வழக்கமும், மற்றவர்களின் நூல்களைத் திரும்பிப் பார்க்கவும் மறுக்கும் வழக்கமும் இருந்து வருகின்றன என் பதை நாம் அறிவோம். அதுமட்டுமல்ல சில நடுவு நிலைமை யான விமர்சகர்களும்கூடப் பாராட்ட நினைப்பதைப் பாராட்டிவிட்டு, மற்ற நாவல்களைப்பற்றி எதுவும் கூருமல் 'நமக்கு ஏன் இந்த வம்பு?’ என்று மெளனம் சாதித்து விடு கிருர்கள் என்பதும் நாம் அறிந்த விஷயமே. தங்களுக்குத் தோன்றிய கருத்துக்களை மனப்பூர்வமாக ஒளிவு மறைவின்றி யாரும் எடுத்துச் சொன்னல் அவற்றை வரவேற்பவர்களும் இல்லை. சாதகமான கருத்துக்களை மட்டும் வரவேற்கிருர் கள்; மாறுபட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிருர் கள். குற்றங்குறைகளை எடுத்துச் சொல்கிறவர்களை விரோதி களாகப் பாவித்து அவர்களைச் சமயம் வாய்க்கும்போது பழிவாங்கவும் விரும்புகிரு.ர்கள். இந்த நிலை இலக்கிய வளர்ச்சிக்குப் பெருங்கேடு விளைவிக்கக் கூடியது என்பதை வற்புறுத்திக் கூற விரும்புகிறேன். இந்த நிலை நாட்டைவிட்டு ஒழிந்தாக வேண்டும். அதேபோல் கோஷ்டிகளாகக் கூடிக் கொண்டு கண்ணே மூடிக்கொண்டு தங்களுக்கு வேண்டியவர் களைப் புகழ்ந்து பிரசாரம் செய்யும் வழக்கமும் ஒழிய வேண்டும். உண்மையான விமர்சனங்களால்தான் இலக்