பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

It #1

கியம் வளர முடியும். கண்மூடித்தனமான பாராட்டுரை களும், திரும்பிப் பாராத அலட்சிய மனப்பான்மையும் இலக்கிய வளர்ச்சியைக் கெடுக்கவே செய்யும். உண்மை யிலேயே தமிழ் தாவல்கள் முன்னேற வேண்டும்; நாவலாசிரி பர்களின் திறமை வளர வேண்டும். வாசகர்களின் ரஸிகத் தன்மை அபிவிருத்தியடைய வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுகிறவர்கள் நேர்மையான விமர்சனங்களையே வரவேற்பார்கள்.

இங்கே ஒரு விஷயத்தைக் கூற விரும்புகிறேன். கடந்த இரண்டு நாட்களும் நடைபெற்ற கூட்டத்தில் வாதப் பிரதி வாதங்களோ தகராருே இல்லாமல் போனதால், சுவாரஸ்ய மில்லாமல் போய்விட்டது என்று சிலர் சொன்னர்கள். இன்று நான் வாதப் பிரதிவாதங்களையும் சர்ச்சைகளையும் பெரிதும் வரவேற்கிறேன். அன்பர்கள் சற்றும் தயங்காமல் தங்கள் கருத்துக்களை வெளியிட முன் வரவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். ஆணித்தரமான பேச்சுக்களையும், கருத்துக்களேயும், கருத்து வேற்றுமைகளையும் இங்கே நான் பெரிதும் வரவேற்கிறேன்.

க. நா. சு. விமர்சனங்கள்

கடந்த இரண்டு தினங்களிலும் நாவல்களை விமர்சனம் செய்த அன்பர்களில் சிலர் திரு. க. நா. சுப்ரமணியம் அவர் களுடைய பெயரைக் குறிப்பிட்டு, அவருடைய விமர்சனங் கண்ப் பற்றிப் பிரஸ்தாபித்தார்கள். இதைப் பார்த்த ஒரு எழுத்தாள நண்பர், 'இது என்ன இது? சாதகமாகவோ பாதகமாகவோ ஒவ்வொருவரும் க. நா. சு.வின் விமர்சனங் களே ஏன் இப்படிப் பிரஸ்தாபிக்க வேண்டும்? அவருக்கு என்ன அவ்வளவு முக்கியத்துவம்: அவர் கருத்துக்கள்தான் அளவுகோல்களா?' என்று என்னிடம் கேட்டார். அந்த அன்பருடைய கேள்விகளுக்கு இப்போது பதில் சொல் கிறேன் : - - - . . . .