பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 2

'சமீபத்தில் வெளியூரிலிருந்து ஒரு முக்கியமான எழுத் தாளர் சென்னைக்கு வந்திருந்தார். அவர் என் நண்பருங் கூட. அவர் என்ளுேடு பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு விஷயத்தைக் கூறினர்: புத்தகங்களையும் பத்திரிகைகளே யும் பொழுது போக்குக்காக வாசிக்காமல், இலக்கிய நோக் குடன் சிரத்தையோடு படிக்கக் கூடியவர்களிடையேஊருக்கு ஒரு சிலராக இருக்கும்-அப்படிப்பட்ட வாசகர் களிடையே-இன்று க. நா. சு.வின் அபிப்பிராயங்களே பரவியிருக்கின்றன. அதற்குக் காரணம், கடந்த பத்துப் பதினைந்து வருஷங்களாக க. நா. சு. திரும்பத் திரும்பத் தம்முடைய கருத்துக்களை வலியுறுத்தி எழுதி வந்திருப்பது தான். இப்படி முழு மூச்சாக வேறு யாரும் விமர்சனம் செய்யவில்லை. மற்றவர்களும் முன்வந்து இலக்கிய விமர் சனம் செய்வதில் சிரத்தை காட்டிெைலாழிய க. நா. சு. வின் கருத்துக்களே ஆதார சூத்திரங்கள் மாதிரி இருந்து வரும். இதை நாம் விரும்பிலுைம் சரி, விரும்பாவிட்டா லும் சரி. இவ்வாறு என் நண்பர் கூறினர். இந்த நிலையில் க. நா. சு.வின் பெயர் அடிக்கடி பிரஸ்தாபிக்கப்படுவது இயல்புதானே? ஒருதலைப்பட்சமான கருத்துக்கள் நாட்டில் பரவக் கூடாது, க. நா. சு. பாராட்டாத எழுத்தாளர் களிலும் சிலர் சிறந்த இலக்கிய கர்த்தாக்களாக இருக்கிருர் கள். அவர் பாராட்டியுள்ளவர்களில் மட்டரகங்களும் உண்டு என்று நினைப்பவர்கள் இன்று செய்ய வேண்டிய காரியம் தங்கள் கருத்துக்களை தெள்ளத் தெளிவாக, விளக்க மாக, ஒளிவு மறைவின்றி எழுதுவதுதான்; ஒளிவு மறை வின்றி மேடைகளில் சொல்வதுதான். அதைச் செய்யாத வரையில், இலக்கியப் பிரியர்களிடையே ஒரு தனி மணி தரின் ஆதிக்கமே நிலவும்; பொது மக்களிடையே, அதிக மாக விற்பனையாகும் பத்திரிகைகளில் தொடர் நாவல் கள் எழுதுகிறவர்களே சிறந்த எழுத்தாளர்கள் என்ற அபிப்பிராயமும் நிலவும். விமர்சனத்துறை விரிவடைந் தாலொழிய இந்த இரண்டு நிலைகளையும் தவிர்க்க முடி lists oil.