பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113

குழந்தைப் பருவம்

தமிழில் இப்போதுதான் நாவல்கள் தோன்ற ஆரம்பித் திருக்கின்றன, இந்தத் துறையில் நாம் குழந்தைப் பரு வத்தில் இருக்கிருேம். வளரும் குழந்தைக்கு ஊக்கமும் உற் சாகமும் கொடுக்க வேண்டுமே ஒழிய, கடுமையான கண் டனங்களால் அதன் வளர்ச்சியைத் தடுத்துவிடக் கூடாது என்று சிலர் கூறுகிருர்கள். இந்தக் கருத்தை நான் ஒப்புக் கொள்ளவில்லை. அப்படிக் கண்டனங்களைக் கண்டு அஞ்சிச் செத்துவிடக் கூடிய எழுத்தாளர்களால் இலக்கியம் படைக்கவே முடியாது. எழுத்தாளனிடம் உண்மையும், உறுதியும், இலட்சியமும் இருக்குமானல் அவன் கண்டனங் களுக்கு அஞ்ச வேண்டியதில்லை. கண்டனங்களால்தான் நான் வளர்ந்தேன்' என்று புதுமைப் பித்தன் கூறினர். எதிர் நீச்சல் போட்டு, தாமாகக் கண்டனங்கள் தகர்ந்து தவிடு பொடியாகும் வண்ணம் உன்னதமான, சாகாவரம் பெற்ற இலக்கியங்களைச் சிருஷ்டித்தவர்கள் உலகில் எத் தனையோ பேர் இருந்திருக்கிரு.ர்கள். அவர்களைத்தான் இயல்பிலேயே, உண்மையிலேயே இலக்கிய கர்த்தாக்களாக இருப்பவர்கள் என்று சொல்ல வேண்டும்.

பெர்ளுர்ட்ஷா கூறியது

பெர்னர்ட்ஷா ஒரு முறை சொன்னர்: "உன் மகனே மகளோ இலக்கிய கர்த்தா ஆக வேண்டுமென்று ஆசைப் பட்டால் ஊக்கமூட்டாதே, தடுத்துவிடு' என்று. கலை களில் அபார ஈடுபாடு கொண்டவளாக உன் மகள் இருந் தால், அவளைக் கலைவாசனை கொஞ்சமும் இல்லாத ஒரு வியாபாரிக்குக் கல்யாணம் பண்ணிக் கொடு’ என்றும் அவர் சொன்னர். எதற்காக இப்படிச் சொன்னர்? எதிர்ப் பையும் மீறி இலக்கியங்களையோ, வேறு கலைப்படைப்புக் களையோ செய்யக் கூடியவர்கள்தான் உண்மையான கலை ஞர்கள், அவர்களால்தான் உருப்படியாக எதையும்