பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

F 4

படைக்க முடியும், உலகத்துக்கு அளிக்க அவர்களிடம் ஏதோ இருக்கிறது என்பதும் உறுதியாகும் என்பதற்காகவே வ;ா இப்படிச் சொன்னர், எனவே நாம் கண்டனங்களையோ, மாறுபட்ட கருத்துக்களையோ எதிர்த்து நிற்கும் ஆற்றல் படைத்தவர்களாக இருக்க வேண்டுமே ஒழிய அவற்றைக் கண்டு அஞ்சிப் பின் வாங்குகிறவர்களாக இருக்கக் கூடாது.

நூறு வருஷச் சாதனை

'நாம் குழந்தைப் பருவத்தில் இருக்கிருேம், அதனல் குறை கூருமல் பாராட்டை மட்டுமே வழங்க வேண்டும்’ என்ற கருத்தை நான் ஒப்புக் கொள்ளாததற்கு இன்னொரு காரணமும் உண்டு. நாவல்கள் எழுதுவதில் நாம் குழந் தைப் பருவத்தில் ஆரம்ப நிலையில் இருக்கிருேம் என்பது உண்மைதான் என்ருலும், நம் கண்முன் நூறு வருஷச் சாதனை இருக்கிறது. உலகத்திலேயே நிகரற்றது என்று ஏகமனதாகப் பாராட்டப்படும் போரும் சமாதானமும்' என்ற டால்ஸ்டாயின் நாவல் வெளி வந்து நூறு வருஷங்கள் ஆகிவிட்டன. அதற்கு முன்னும் பல நல்ல நாவல்கள் வெளி வந்திருக்கின்றன. பின்னும்-இன்று வரையிலும்எத்தனையோ நல்ல நாவல்கள் வெளி வந்து விட்டன. இத்தனை நாவல்களும் ஆங்கிலத்தில் கிடைக்கின்றன. நம் ஊர்க் கடைகளிலேயே விற்பனையாகின்றன. நாமும் வாங்கிப் படிக்கிருேம். இந்த நூறு வருஷச் சாதனையைப் பார்த்த பிறகும், உலகத்தில் முதல் முதலாக நாவல் தோன்றிய காலத்தில் எப்படி எழுதப்பட்டதோ, அப்படித் தான் இப்போது தமிழ் நாட்டில் எழுதப்படும் என்று சொல்வது கேலிக் கூத்தாகும். உலகின் நூறு வருஷச் சாதனையை நம்முடையதாக்கிக் கொண்டு, அந்தச் சாதனையை ஆரம்ப கட்டமாக வைத்துக் கொண்டு மேலே செல்லத்தான் நாம் முயல வேண்டும். உலக வளர்ச்சியோடு நம் வளர்ச்சி சம நிலையில் ஒத்திருக்கும்படியாகவும், முடிந் தால் உலக வளர்ச்சியின் அளவைத் தாண்டி மேலே செல்