பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A 15

ஆம்படியாகவும்தான் நாம் எழுத பிரயத்தனம் செய்ய வேண்டும். இதை விட்டு, 'நாம் குழந்தைப் பிராயம். அதஞல் அதற்குத் தக்கபடிதான் நம்முடைய எழுத்தும் இருக்கும்' என்று சொல்லிக் கொண்டிருந்தால், நாம் நிரந்தரமாக உலக வளர்ச்சிக்கு நூறு வருஷங்கள் பின் தங்கியே இருக்க வேண்டி வரும் என்பதை மறந்துவிடக் கூடாது.

இப்படிப்பட்ட நிரந்தரமான பின் தங்கிய நிலையை யாருமே விரும்ப மாட்டார்கள். எனவே நாவலாசிரியர் களும் சரி, வாசகர்களும் சரி, உலக சாதனையைத் தங்கள் பிதுரார்ஜிதமாக வைத்துக் கொண்டு முன்னேக்கிச் செல்ல வேண்டியது அவசியம்.

பின்பற்றுதல்

அடுத்தபடி, பின்பற்று பின்பற்று' என்று பலரும் அடிக்கடி கூறிக் கொண்டு வருவது பற்றிச் சில வார்த் தைகள் சொல்ல விரும்புகிறேன். யாராவது ஒரு எழுத் தாளரைப் பாராட்டிப் பேசும்போதோ, எழுதும்போதோ அவரை எல்லோரும் பின்பற்ற வேண்டும்' என்று சொல்லி முடிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்தப் பின் பற்றுதல்' என்பது, இலக்கியத் துறையில் பேசத் தகாத ஒரு பேச்சாகும். இது அரசியல் துறையில் பேச வேண்டிய பேச்சு. அதை இலக்கியத் துறையில் வந்து சொல்விக் கொண்டிருப்பது தவறு. இது வரையிலும் நூற்றுக் கணக் கானவர்களின் பெயர்களைச் சொல்லி அவர்களைப் பின் பற்ற வேண்டும் என்றும் சொல்லி விட்டார்கள். அத்தனை பேரையும் ஒரு எழுத்தாளன் பின் பற்றுவதுதான் எப்படி? ஒருவரைப் பின் பற்றுவதே கஷ்டம், நூற்றுக் கணக்கான வர்களைப் பின் பற்றுவது எப்படி? அப்படிப் பின் பற்றினல் அவன் கதி என்ன ஆவது? எந்த எழுத்தாளரைப் பின் பற்ற வேண்டும் என்று சொல்கிருர்களோ, அந்த எழுத்தாளர் ாாரைப் பின் பற்றி அந்த ஸ்தானத்தை அடைந்தார்