பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 16

என்பதை யாரும் சொல்வதில்லை. அவர்களுடைய உதாரண புருஷர் யாரையும் பின்பற்ருததால்தான் இன்று இந்தத் தனிப் பெரும் ஸ்தானத்தை அடைந்திருக்கிருர் என்பதை அவர்கள் மறந்து விடுகிருர்கள். எப்பொழுதுமே, பின் பற்றுகிறவன் என்பவன் உயர்ந்த எழுத்தாளனாகத் தலை யெடுக்கவே முடியாது. ஏனென்ருல் பொருள் புதிது, சுவை புதிது, நடை புதிது என்றெல்லாம் பாராட்டக் கூடிய பற் பல புதுமைகளே இந்தப் பின் பற்றுகிறவனல் சாதிக்க முடியாது. நாவலாசிரியர்கள் தங்களுக்கு முன் வெளி வந் துள்ள நாவல்களைப் படித்துவிட்டு, அவற்றைத் தாண்டி மேலே போக, முன் பற்ற முயல வேண்டுமே ஒழிய, பின் பற்றுவதை நினைத்துக்கூடப் பார்க்கக் கூடாது. உல கத்தில் இது வரையிலும் இப்படி முன் பற்றியவர்கள் தான்' அதாவது முன்னேறிச் சென்றவர்கள்தான் உயர்ந்த இலக்கியக் கர்த்தாக்களாக விளங்கியிருக்கிருர்கள். யாரை யுமே பின் பற்ருமல் புதிதாகச் சொல்வதற்கு ஏதேனும் இருந்தால் எழுத வேண்டும். அப்படி இல்லையென்ருல் எழு தாமல் சும்மா இருக்க வேண்டும். நோபல் பரிசு பெற்ற ஈ. எம். பார்ஸ்டர் என்ற ஆங்கில எழுத்தாளர் பல வரு ஷங்களாக எதுவுமே எழுதவில்லை. அவரைப் பிரசுரகர்த் தர்களும் மற்றவர்களும் அணுகி, நீங்கள் ஏன் இப்போது எதுவும் எழுதுவதில்லை?' என்று கேட்டதற்கு, எழுது வதற்கு இப்போது என்னிடம் எதுவும் இல்லை. இருந்த போது எழுதினேன். இல்லாதபோது சும்மா இருக்கிறேன்' என்று விடையளித்தாராம் பார்ஸ்டர். அதுபோல் யாரும் சொல்லாத, கையாளாத விஷயங்களும், உத்திகளும், புதுமைகளும், இன்னும் இவை போன்ற அம்சங்களும் ஒரு வனிடம் இல்லை என்ருல், அவன் எழுதாமல் இருந்து விடுவதுதான் உத்தமம். - -

எதார்த்த கிலை

நாவல்களை எழுதும்போது எப்படி எழுதினல் சுவாரஸ்ய மாக இருக்கும் என்றுமட்டும் நினைத்துக்கொண்டு எழுதினால்