பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 7

எதார்த்தமாக இருக்கும் என்றநோக்குடன் எழுதவேண்டும். அது இலக்கியம் ஆக முடியாது. எப்படி எழுதினால் நம்ப முடியாத, செயற்கைத் தன்மை கொண்ட பாத்திரங் களையும், சம்பவங்களையும், திருப்பங்களையும், உரையாடல் களையும், பாத்திரப் பெயர்களையும் கொண்ட எந்த நாவலுமே இலக்கியத் தரமுடைய நாவல் அல்ல. ஈஸாப் கதைகள் மாதிரியோ, புராணங்களைப் போலவோ முழுக்க முழுக்கக் கற்பனைத் தன்மையோடு, ஒரு நீதியையோ ஒரு உண்மையையோ விளக்குவதற்கு ஒரு உருவகக் கதை புனேய லாம்; ஒரு நாவலே எழுதலாம். அதில் தவறு ஒன்றுமில்லை. ஆளுல் 1966-ல் சென்னையில் நடப்பது போன்று எழுதும் ஒரு நாவலில் அந்த மாதிரியான கற்பனைத் தன்மைக்கும் செயற்கைக்கும் இடமே இல்லை. வாசகர்களுக்கு, இப்படி நடப்பது சாத்தியம்: இப்படிப்பட்டவர்கள் இருப்பதும் சாத்தியம்' என்று தோன்றும்படி எதார்த்த பூர்வமான முறையில் எழுதினுல்தான் அது இலக்கியமாக முடியும். இப்பொழுது உள்ள சில நாவல்களின் கதா பாத்திரங்களின் பெயர்களை மாற்றினால் சரித்திர நாவல் சமூக நாவலாகி விடும்; சமூக நாவல் சரித்திர நாவலாகி விடும். சென்னையில் நடப்பது போன்று எழுதப்பட்ட நாவலில், சென்னை என்பதை அடித்து விட்டு மதுரை என்ருே, பாரிஸ் என்ருே, லண்டன் என்ருே போட்டாலும் நாவல் பாதிக்கப்படாது! இப்படி எந்தக் காலத்துக்கும் எந்த ஊருக்கும் பொருந்தும்படியாக ஒரு நாவல் எழுதப்பட்டி ருந்தால், அது இலக்கியமல்ல என்றும், உண்மையில் அது எந்தக் காலத்துக்கும் எந்த ஊருக்கும் பொருந்தக் கூடிய தல்ல என்றும் அறிய வேண்டும். ஒரு நாவல் 1966-ல் சென்னையில் நடப்பதாக எழுதப்பட்டால், அது இந்தக் கால கட்டத்தில் சென்னையில்தான் நடக்க முடியும் என்று சொல்லத் தக்கவாறு இருக்க வேண்டும். அப்படி காலத்தின் தனித் தன்மைகளையும், களத்தின் தனித் தன்மைகளையும், அந்தக் காலத்தில் அந்தக் களத்தில் நடமாடும் பாத்திரங் களின் தனித் தன்மைகளையும் படம் பிடித்துக் காட்டுவது