பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 18

தான் இலக்கியத் தரம் உடைய அசல் நாவலாக இருக்க முடியும்.

புரியாத வழக்குகள்

நாவலில் கையாளும் பாஷை பற்றிச் சிலர் விசித்திர மான ஒரு கருத்தைச் சொல்லி வருகிருர்கள். தமிழ் நாட்டின் எல்லா ஜில்லாக்களிலும் உள்ளவர்களும், எல்லாப் பிரிவினரும் புரிந்து கொள்ளக்கூடிய சொற்களையும் சொல் வழக்குகளையுமே நாவலில் உபயோகிக்க வேண்டும் என்றும், மற்றப் பிரதேச வாசிகளுக்குப் புரியாத ஒரு குறிப்பிட்ட வழக்குகளைக் கையாளவே கூடாது என்றும் அவர்கள் சொல் கிருர்கள். நாவல் இலக்கியத்தின் அரிச்சுவடிகூடத் தெரியாத வர்களின் கூற்று என்றே இதைச் சொல்லவேண்டும். குறிப்பிட்ட பிரதேசத்தில் கதை நடப்பதாக எழுதும் போது அந்தப் பிரதேச வழக்குகளைத்தான் கையாள வேண்டும். மற்றப் பகுதிகளில் உள்ளவர்களுக்குப் புரியாது என்ருல், அவற்றிற்கு அனுபந்தத்திலோ வேறு தக்க இடங் களிலோ விளக்கம் கொடுக்கலாம். அதை விட்டு விட்டு, எல்லோருக்கும் புரியவேண்டும் என்பதற்காகப் பிரதேச வழக்குகளை மாற்றி வேறு வார்த்தைகளைப் போட்டால், நாவலின் இலக்கியத் தன்மை செத்துவிடும் என்பதில் சந்தேக மில்லை. பார்க்கப் போனல் சில பொது வழக்குகளுமே பலருக்குப் புரிவதில்லை. சில ஜாதி வழக்குகளுமே அதே மாதிரித்தான். ஆனல் அவை தங்களுக்குப் புரிவதால் மற்றவர்களுக்கும் புரியத்தான் வேண்டும் என்று நினைத்துக் கொண்டு விடுகிரு.ர்கள். அதனல் பொது வழக்குகளையே பயன்படுத்த வேண்டும், பிரதேச வழக்குகள் கூடாது என்று சொல்வதில் அர்த்தமே இல்லை.

நாவலின் எதிர்காலம்

இனி நாவலின் எதிர்காலம் பற்றிப் பார்ப்போம். மேலை நாட்டு அறிஞர்கள் சிலர் இதைப் பற்றிக் கூறியுள்ள