பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119

சில கருத்துக்கள் இப்பொழுது நம்முடைய கவனத்திற்கு உரியவையாக இருக்கின்றன. கடந்த சுமார் ஒரு நூற்முண்டு காலத்தில் உலகில் எத்தனையோ விதமான நாவல்கள் தோன்றிவிட்டன; எத்தனையோ விதமாகக் கதைகளைப் பின்னிப் பார்த்துவிட்டார்கள். இனி வேறு விதமான ஒரு கட்டுக் கோப்பில், வேறு விதமாகக் கதை பின்னுவ தற்கு இடமே இல்லை. அதல்ை நாவலாசிரியர்கள் புதிய கட்டுக் கோப்புக்களே உருவாக்கவோ புதிய முறையில் கதை பின்னவோ முயன்று மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டாம். அது நடவாத காரியம். இப்போது அவர்கள் கவனம் வேருெரு விஷயத்தின் மீது திரும்ப வேண்டும் என்று அந்த அறிஞர்கள் கூறுகிருர்கள். வேருெரு விஷயம் என்று அவர்கள் குறிப்பிடுவது பாத்திரப் படைப்பைத் தான். சமூகத்தில் பல்லாயிரக்கணக்கான பாத்திரங்கள் நடமாடுகின்றன. ஒவ்வொரு பாத்திரத்தையும் ஆராய வேண்டும். அந்தப் பாத்திரத்தின் தனித் தன்மையிலிருந்து நாவல் உருவாக வேண்டும் என்று அவர்கள் சொல்கிருர்கள். அவர்கள் குறிப்பிட்டுள்ள பாத்திரம்' என்ற இந்த அம்சம் ஒரு வற்ருச் சுரங்கம் என்பதில் சந்தேகமில்லை. உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையுமே ஒரு பாத்திர மாகப் பிறக்கிறது. எனவே இந்தச் சுரங்கத்தைப் பயன் படுத்தத் தெரிந்தால், உலக அரங்கில் இடம் பெறக்கூடிய உயர்ந்த நாவல்களேத் தமிழ் எழுத்தாளர்கள் நிச்சயம் எழுத முடியும்.

வேருெரு சுரங்கம்

பாத்திரங்களுக்கு அடுத்தபடியாகத் தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் வேருெரு சுரங்கமும் இருக்கிறது. நாவல் படைப்புத் துறையின் ஆரம்பக் கட்டத்தில் நாம் இருப்பதால் இந்தச் சுரங்கம் இன்னும் அள்ளாமல் குறையாமல் இருக்கிறது. அதுதான் பிரதேச வாழ்க்கை' என்ற சுரங்கம். மேல் நாட்டு எழுத்தாளர்கள் எல்லாப்