பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்கியின் சிவகாமியின் சபதம்

புத்தனேரி ரா. சுப்பிரமணியம்

பல ஆண்டுகளுக்கு முன், நண்பர்கள் சிலருடன் முதல் முறையாக மகாபலிபுரம் என்னும் மாமல்லபுரத்திற்குச் சென்றிருந்தேன். சிற்ப விளக்கம் செப்புவோரின் துணை யில்லாமலே நாங்கள் சிற்பக் கோயில்களின் அற்புதத்தைக் கண்டு வியந்து கொண்டிருந்தோம்.

அழகிய பெண்ணின் சிலை ஒன்றின் முன்னல் அமெரிக்க யாத்திரீகர் மூவர் வியப்புடன் நின்று ரசித்துக் கொண் டிருந்தனர். ஒட்டுப் போட்ட பழைய குப்பாயம் அணிந்த கிழவர் ஒருவர், அவருக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் சிற்பத்தின் சிறப்பை மேலை நாட்டினருக்கு விளம்பிக் கொண்டிருந்தார். -

- - 'இந்த நடனச் சிற்பத்தில் உள்ள அழகியின் பெயர் சிவகாமி. இந்த மாமல்லபுரச் சிற்பங்களை உருவாக்கிய ஆயனச் சிற்பியின் அருமை மகள். பல்லவ இளவரசர் மாமல்லர் நரசிம்மரின் காதலி...' என்றெல்லாம் சிவகா மிக்கு வரலாற்று முத்திரை கொடுத்துக் கதையளந்து கொண்டிருந்தார் அந்த முதியவர். அவரது கதையைக் கேட்கக் கேட்க அந்த அமெரிக்க அன்பர்களுக்கு மட்டு மல்ல; ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த எங்களுக்குக்கூட மிகவும் இனிப்பாகத்தான் இருந்தது! w

அமரர் கல்கி அவர்களின் சொல்லிலே உருவான சிவகாமி, எப்படியோ கல்லிலும் நிலைத்து விட்டாள் என்று