பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

யான் களிப்புற்றேன். கற்பனையாக ஒரு பாத்திரத்தைப் படைத்து, அதனேக் கலை வடிவமாகக் கல்லிலும் நிலைபெறும் அளவுக்குப் பெருமையளித்த சிந்தனைச் சிற்பியின் பேன எத்துணைச் சக்தி வாய்ந்தது என்பதை எண்ணி எண்ணி வியந்தேன்.

அது மட்டுமா? அண்மையில் வெளியான திரைப்படம் ஒன்றில் கதாநாயகி தன்னைச் சிவகாமியாகவே கற்பனை செய்துகொண்டு, சித்தப் பிரமை பிடித்திருந்த நிலை சித்திரிக்கப் பட்டிருந்ததைக் கலையன்பர்கள் கவனித்திருப் பார்கள்.

நவீன சிவகாமி-நரசிம்மர் காதல் நகைச் சுவை எழுத்தோவியம் ஒன்று புகழ்மிக்க வார இதழ் ஒன்றில் வெளியான புதுமையையும் வாசக அன்பர்கள் அறி வார்கள்.

சின்னஞ் சிறு பெண்களிடம் நடன மோகம் பொங்கி யுள்ள காலம் இது. நடனத்திலே தேர்ச்சி பெற்ற நங்கை ஒருத்தி சற்றே ஆணவம் பிடித்தவளாக இருந்தால், :நடனத்தில் என்னவோ பெரிய சிவகாமி என்றுதான் மனத் திலே நினைப்பு!" என்று மற்றவர்கள் சுட்டிக் காட்டுத் அளவுக்குச் சிவகாமியின் பெயர் நிலைத்துவிட்டது

தலைசிறந்த தமிழ் எழுத்தாளர் ஒருவரின் கற்பனையில் மலர்ந்த நடன அழகி சரித்திர நாயகர்களையும் மிஞ்சக்கூடிய வண்ணம் வலுவான இடம் பெற்று மக்கள் மனத்திலே நிலைத்துவிட்டாள் என்ருல், எழுத்தாளர் உலகம் பெருமைப் பட் வேண்டாமா ? . - . .

நாவல் எழுதுவது எ வரி தா ன காரியமல்ல என் பதை எழுத்தாளர்கள் அறிவர். சிந்தனைத் தெளிவும், கற்பனைப் பொழிவும் உடையவர்களால் மட்டுமே தலைசிறந்த நாவலைப் படைக்க முடியும். சாதாரண நாவல்களைவிடச் சரித்திர நாவல்களை உருவாக்குவது மிகப் பெரிய சாதனை என்பதில் ஐயமில்லை. வரலாறு நிகழ்ந்த காலம், அதனோடு ஒட்டிய பழக்க வழக்கம், வாழ்க்கை நியதி, ஆடை-அணிதுணைக் கருவிகள் முதலானவற்றை எல்லாம் நன்கு