பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ii

ஆராய்ந்து, சம்பவங்களோடு சுவை ததும்பப் பொருத்திக் கதையை உருவாக்க வேண்டுமல்லவா ? .

சரித்திர நாவலில், வரலாற்று அம்சம் எவ்வளவு, கற்பனை எவ்வளவு என்பதை வாசகர்கள் பொதுவாகத் துருவிப் பார்க்கத் துணிய மாட்டார்கள். ஆயினும், ஆராய்ச் சியாளர்கள் இதனைக் கவனிக்காமல் விடமாட்டார்கள். தினையளவு சரித்திரப் புள்ளியும், பனையளவு கற்பனையும் கொண்டு நாவல்களைப் படைக்கும் விற்பன்னர்களும் உளர். வாதுமைப் பருப்பே இல்லாமல், வாசனைச் சாறு தெளித்து, 'வாதுமை அல்வா எனத் துணிவோடு வழங்கும் மகா வித்தை, வரலாற்று நாவலாசிரியர்கள் சிலருக்கும் தெரிந் திருக்கக் கூடும்.

நாவலின் கருவாக அமையும் சரித்திர உண்மைகளில் தவறு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது வரலாற்று நாவலாசிரியர்களின் கடமை. புகழ் பெற்ற சர். வால்டர் ஸ்காட்டின் நாவல்களில்கூட வரலாற்றுத் தவறுகள் உள்ளன என ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். ஆயினும் அவருடைய நாவல்களின் சுவையான கட்டுக் கோப்பின் கவர்ச்சியினல் சரித்திரத் தவறுகள்கூட வாசகர் களின் கண்ணில் படாமல் மறைந்துவிடுகின்றனவாம் !

மேற்கண்ட உண்மைகளையெல்லாம் மனத்தில் ஏந்திக் கொண்டு கல்கி அவர்களின் சிவகாமியின் சபதத்தை ஆராய்வோமானுல் அதன் தனிச் சிறப்பு நன்கு புலகுைம். தமிழில் முதன் முதலாகச் சுவை ததும்பும் வரலாற்று நாவல் இலக்கியத்தைப் படைத்து வழிகாட்டியவர் அமரர் கல்கி. பார்த்திபன் கனவு’ என்ற அவரது முதல் வரலாற்று நாவலும், அதைத் தொடர்ந்து அவர் படைத்த சிவகாமியின் சபதம்', 'பொன்னியின் செல்வன்' ஆகிய புதினங்களும் இலட்சக் கணக்கான வாசகர்களின் இதயத் தைக் கவர்ந்துள்ளன.

வரலாற்று அடிப்படை உண்மைகளைத் தங்கக் கம்பி களாக இழைத்து, முறுக்கிய வலுவான சரட்டிலே கற்பனை