பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

என்னும் அற்புத முத்துக்களைக் கோத்து, அழகான நல்முத்து மாலையாகச் சிவகாமியின் சபதத்'தைத் தமிழன்னைக்குச் சூட்டியுள்ளார் கல்கி. இந்த நாவலே நுட்பமாக ஆராய்ந்த பேராசிரியர் திரு கே.வி. ரங்கசாமி ஐயங்கார், வரலாறு அல்லது பூகோள அடிப்படையில் ஒரு சிறு தவறுகூட இந்த நாவலில் தென்படவில்லை' எனத் தெளிவாகச் சான்று கூறி யுள்ளார். கல்கி அவர்கள் முன்னே படைத்த பார்த்திபன் கன வையும், பின்னே படைத்த பொன்னியின் செல்வனையும் - வெல்லும் அளவுக்குக் கட்டுக் கோப்பும் பாத்திர யாப்பும் அமைந்துள்ள தன்னிகரற்ற நாவல் இலக்கியம் 'சிவகாமி யின் சபதம்’

பல்லவப் பேரரசர் இருவரது வரலாற்றுப் பின்னணியில் இந்த நாவல் உருவாக்கப்பட்டுள்ளது. கி. பி. 600 முதல் 630 வரை மகேந்திர சக்கரவர்த்தியும், கி.பி. 630 முதல் 668 வரை மாமல்லர் நரசிம்மப் பல்லவனும் பல்லவ நாட்டில் புகழ்க் கொடி நாட்டினர் என்பது வரலாறு.

பல்லவர்கள், தொண்டைமான் இளந்திரையன் வழிச் சோழர் மரபினராகவே இருக்க வேண்டுமென நிலைநாட்ட முற்பட்ட கல்கி, தமிழகத்துக்குப் பலவகையிலும் பெருமை தந்த காஞ்சிப் பல்லவர்களே அந்நியர்கள் என்று சொல்வது போன்ற கட்டுக்கதை உலக சரித்திரத்தில் வேறு கிடை யாது’ என ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளதைக் கடல் தந்த குழந்தை' என்னும் அத்தியாயத்தில் காணலாம்.

மகேந்திர வர்மன் தன் நாட்டின்மீது படையெடுத்த பகைவர்களைப் புள்ளனூரில் முறியடித்துத் துரத்தினன்' என்று காசக்குடிப் பட்டயம் கூறுகின்றது.

மகேந்திர வர்மனுக்குப் பின் மாமல்ல நரசிம்மன் சாளுக்கியர்மீது பெரும்படை எடுத்துப் புலிகேசியைவென்று,

கி.பி. 642ல் சாளுக்கியரின் தலைநகரான வாதாபியைத்

தீக்கிரை யாக்கினன் என்பதும் வரலாற்று உண்மை, வாதாபிப் போரில் மாமல்லனுக்குத் தளபதியாக இருந்து