பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፫ 8

வெற்றி தேடித் தந்தவர் பரஞ்சோதியார் என்னும் சிறுத் தொண்டர் என்பதையும் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒப்புக் கொள்கின்றனர்.

"மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாபித் தொன்னகரம் துகளாகத் துணைநெடுங்கை

- வரைஉகைத்துப் பன்மணியும் நிதிக்குவையும் பாட்டினமும் - - பரித்தொகையும்

இன்னனஎண் ணிலகவர்ந்தே இகலரசன்முன்

கொணர்ந்தார்!’’

எனச் சேக்கிழார் பெருமானும் பரஞ்சோதியின் வீரம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். -

எனவே இந்த நாவலில் வரும் முக்கிய பாத்திரங்களான மகேந்திரச் சக்கரவர்த்தி, மாமல்ல நரசிம்மன், பரஞ்சோதி, புலிகேசி முதலாளுேர் வரலாற்றில் நிலையான இடம் பெற் றவர்களாவர். திருநாவுக்கரசர், இலங்கை அரசன் மான வன்மன், பாண்டியன், நெடுமாறன், மங்கையர்க்கரசியார், குலச்சிறையார், ருத்ராச்சாரியார், சீன யாத்திரிகர் "ஹியூ-வான்-சங் முதலான வரலாற்றுத் தொடர்புடைய பாத்திரங்களும் கதையுடன் பின்னிப் பிணைகின்றனர்.

மாமல்ல புரத்தின் அற்புதத்தைக் காணும்போது அதன் சிற்பக் கோயில்களை அமைத்த தலைமைச் சிற்பி ஒருவர் இருந்திருக்க வேண்டும் என்று யூகிக்க இடமிருக்கிறதல்லவா? அந்தத் தலைமைச் சிற்பியைக் கற்பனைக் கதாபாத்திரமாக உலவவிட்டார் கல்கி. ஆயனச் சிற்பியைப் படைத்தார்: அவருக்குச் சிவகாமி என்னும் அழகிய மகளைப் படைத்தார்: அவளிடம் நடனத் திறமையைப் படைத்தார்: கன்னியின் மனத்தில் கலையோடு இணைந்த காதல்ப் படைத்தார்; காதற் கொடி படர்ந்து இளவரசன் மாமல்லனின் இதயத்தைத் தழுவும் இன்பச் சூழ்நிலையையும் படைத்தார்; கலையும்