பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

காதலும் வீரமும் இழையோடும் நாவல் உருவாகி விட்டது.

போருக்கு இடம் கொடாத வீரப் பெருவேந்த ளுகவும், கொலை வழியான போரைத் தவிர்த்துக் கலைவழி யிலே கருத்தைச் செலுத்தும் காவலனுகவும் புகழ்பெற விரும்பிய மகேந்திர வர்மன், வடக்கே சாளுக்கிய மன்ன னையும், மேற்கே கங்க நாட்டுக் காவலனையும், தெற்கே பாண்டிய வேந்தனையும் சமாளிக்க வேண்டிய நெருக்கடியில் எத்தனை வகையான உத்திகளைக் கையாண்டான் என்பதைத் தித்திக்கத் தித்திக்கச் சித்திரிக்கிறது சிவகாமியின் சபதம்.'

காஞ்சி மாநகரை முற்றுகையிடத் துணிந்து ஏமாற்றம் கண்ட வாதாபி வேந்தன் புலிகேசி வெறிகொண்டு சிற்பக் கூடங்களே யெல்லாம் இடித்துத் தள்ளுமாறு தன் வீரர் களுக்குக் கட்டளையிட்ட சமயம் மகேந்திரச் சக்கரவர்த்தி கையாண்ட ராஜதந்திரம் மெய்சிவிர்க்கச் செய்வதாகும். எதிரி ஒற்றரான நாகநந்தி அடிகளையே தந்திரமாகப் பயன் படுத்தி மாமல்லபுரச் சிற்பங்கள் அழியாமல் பாதுகாத்த மதிநுட்பம் பல்லவப் பேரரசனுக்கு விசித்திர சித்தன்' என்ற பட்டப் பெயர் தகும்-தகும் எனச் சான்று பகர் கின்றது.

நாட்டின் நன்மையைக் கருதி, சிவகாமி-மாமல்லன் காதலே. அறுத்தெரியவும், நாகநந்தியின் நயவஞ்சகங்களை உடைத்தெறியவும், மகேந்திர வர்மன் மாறு வேடங்கள் பல புனைந்து, சுறுசுறுப்புடன் பம்பரமாய்ச் சுழன்று, சிக்கல்களை விடுவிக்க முனையும் ஒவ்வொரு கட்டமும் நாவலாசிரியர் திறமையை எடுத்துக் காட்டுகின்றது. மகேந்திரனின் ராஜ தந்திரச் செயல்களின் காரணமாகவே மகேந்திர ஜாலம்’ என்ற தொடரே பிறந்திருக்குமோ என்றுகூட எண்ணத் தூண்டுகிறது. . -

பெரும்பகுதி மகேந்திர வர்மனின் ராஜதந்திரங்களே வியாபித்திருந்த போதிலும், இந்த நாவலின் கதாநாயக